சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேன் - லாரி மோதி விபத்து ஓட்டளிக்க வந்த 3 பேர் பலி

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
மதுரை:ஓட்டு போட ஊர் திரும்பியவர்கள் வந்த வேன் விபத்தில் சிக்கியதில், மூன்று பேர் இறந்தனர்; ஏழு பேர் காயமடைந்தனர்.விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள், கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியில் தங்கி வேலை செய்கின்றனர். ஓட்டு போட, சொந்த ஊருக்கு வேனில் கிளம்பினர்.மதுரை மாவட்டம், பேரையூர் அருகே அல்லிகுண்டத்தில் அதிகாலை, 5:45 மணிக்கு வேனும்,
 வேன் - லாரி மோதி விபத்து ஓட்டளிக்க வந்த 3 பேர் பலி

மதுரை:ஓட்டு போட ஊர் திரும்பியவர்கள் வந்த வேன் விபத்தில் சிக்கியதில், மூன்று பேர் இறந்தனர்; ஏழு பேர் காயமடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள், கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியில் தங்கி வேலை செய்கின்றனர். ஓட்டு போட, சொந்த ஊருக்கு வேனில் கிளம்பினர்.மதுரை மாவட்டம், பேரையூர் அருகே அல்லிகுண்டத்தில் அதிகாலை, 5:45 மணிக்கு வேனும், சிவகாசியில் இருந்து அட்டை ஏற்றி வந்த லாரியும் மோதிய விபத்தில், 20 - 38 வயதுள்ள மூன்று ஆண்கள் இறந்தனர்.

லாரி டிரைவர் உள்ளிட்ட ஏழு பேர் காயமடைந்து, உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். விபத்தில், லாரியில் இருந்த அட்டைப் பெட்டியில் தீப்பற்றி, லாரி முழுதும் எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.லாரியின் டயர் வெடித்ததில், கட்டுப்பாட்டை இழந்த லாரி, எதிரே வந்த வேன் மீது மோதியது, விசாரணையில் தெரிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X