திருச்சி:ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை என்பதால், நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர்கள் ஓட்டு அளிக்காமல் தர்ணாவில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதியில், தேவராயநேரி உள்ளது. இங்கு, 300க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாய குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்காக, அங்கேயே ஒரு ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.வரமாட்டோம்இதில் மொத்தம், 893 வாக்காளர்கள் உள்ளனர். நேற்று காலை ஓட்டுப்பதிவு துவங்கி, ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும், யாரும் ஓட்டுப் போட வரவில்லை.
ஆனால், ஓட்டுச்சாவடிக்கு வெளியே கும்பலாக நின்று பேசிக் கொண்டிருந்தனர்.அவர்களிடம் அலுவலர்கள் வந்து பேசியபோது, 'எங்களுக்கு ஓட்டுக்கு இன்னும் பணம் வரவில்லை. அதனால், ஓட்டு போட வரமாட்டோம்' எனக் கூறினர். அதிர்ச்சியடைந்த அலுவலர்கள், திரும்பிச் சென்று விட்டனர்.
அமுக்கி விட்டனர்
தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., வினர், அவர்கள் வீடுகளுக்கு சென்று, பணம் வழங்கி, ஓட்டு போட வைத்தனர். ஆனாலும், ஓட்டுப்பதிவு துவங்கி, நான்கு மணி நேரத்தில், 120 ஓட்டுகளே பதிவாகி இருந்தன. மற்றவர்கள் ஓட்டுச்சாவடி வெளியே நின்று, 'பணம் வந்தால் தான் ஓட்டு போட வருவோம்' என, தர்ணாவில் ஈடுபட்டனர். சில பெண்கள், 'அரசு எங்களுக்கு ஓட்டு போட கொடுத்த காசை சிலர் அமுக்கி விட்டனர்' எனவும் அதிரடியாக கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE