ரவுடியை வெட்டிய அண்ணன், தம்பி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரவுடியை வெட்டிய அண்ணன், தம்பி கைது

Added : ஏப் 06, 2021
Share
காஞ்சிபுரம் : வாய் தகராறில், பழைய ரவுடியை கத்தியால் வெட்டிய அண்ணன், தம்பியை, போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம், பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஆணை என்ற ஆனந்தன், 34; பழைய ரவுடி. இவர் மீது, பல வழக்குகள் உள்ளன. நேற்று மதியம், தன் வீட்டு அருகில், ஆனந்தன், அதே பகுதி ஹரி, 30, அவரது தம்பியிடம் பேசி கொண்டிருந்தார்.அப்போது, அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆனந்தன்,

காஞ்சிபுரம் : வாய் தகராறில், பழைய ரவுடியை கத்தியால் வெட்டிய அண்ணன், தம்பியை, போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம், பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஆணை என்ற ஆனந்தன், 34; பழைய ரவுடி. இவர் மீது, பல வழக்குகள் உள்ளன. நேற்று மதியம், தன் வீட்டு அருகில், ஆனந்தன், அதே பகுதி ஹரி, 30, அவரது தம்பியிடம் பேசி கொண்டிருந்தார்.அப்போது, அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆனந்தன், வீட்டுக்குள் சென்று, கத்தியை எடுத்து வந்து, இருவரையும் வெட்ட முயன்றார். சுதாரித்த ஹரி, அவரிடமிருந்து கத்தியை பறித்து, ஆனந்தனின் தலை, இடுப்பு மற்றும் கைகளில் வெட்டினார்.

இதற்கு, அவரது தம்பியும் உடந்தையாக இருந்தார் .இதையடுத்து, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், ஆனந்தன் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சையில் இருக்கும்போது, தன்னை தாக்கியோரை கைது செய்ய கோரி, பிளேடால், கழுத்தை அறுக்க முயற்சித்தார். சிவகாஞ்சி போலீசார், அவரை சமாதானப்படுத்தி, ஹரி, அவரது தம்பியை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X