சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'சூரியனுக்கு போட்டேன்; இலைக்கு விழுந்தது' 20 நிமிடம் ஓட்டுப்பதிவு நிறுத்தம்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
அவிநாசி:'உதயசூரியனுக்கு பட்டனை அழுத்தினேன்; ஆனா, இரட்டை இலைக்கு ஓட்டு விழுந்தது' என, அவிநாசி தொகுதியில், ஒரு வாக்காளர் புகார் தெரிவித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர் மாவட்டம், அவிநாசி தொகுதி, கணியாம்பூண்டி ஓட்டுச்சாவடியில்(எண்.312), நேற்று ஓட்டளித்த, மாரிமுத்து, 40 என்பவர், 'தி.மு.க.,வுக்கு உதயசூரியன் சின்னத்தில் பட்டனை அழுத்தினேன்; ஆனால், 'விவி' பேடில்,

அவிநாசி:'உதயசூரியனுக்கு பட்டனை அழுத்தினேன்; ஆனா, இரட்டை இலைக்கு ஓட்டு விழுந்தது' என, அவிநாசி தொகுதியில், ஒரு வாக்காளர் புகார் தெரிவித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி தொகுதி, கணியாம்பூண்டி ஓட்டுச்சாவடியில்(எண்.312), நேற்று ஓட்டளித்த, மாரிமுத்து, 40 என்பவர், 'தி.மு.க.,வுக்கு உதயசூரியன் சின்னத்தில் பட்டனை அழுத்தினேன்; ஆனால், 'விவி' பேடில், அ.தி.மு.க.,வின் 'இரட்டை இலை' சின்னம் தெரிந்தது' என்று புகார் தெரிவித்தார்.''ஏற்கனவே, 200க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் ஓட்டு போட்டு விட்டனர். அவர்கள் இத்தகைய புகாரை கூறவில்லை. \

ஓட்டுப்பதிவு மெஷின் மற்றும், 'விவி' பேடு சோதிக்கப்பட்டது. இவற்றில், குளறுபடி இல்லை'' என்று, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் அவருக்கு விளக்கம் அளித்தனர். பின், ஓட்டுப்பதிவு தொடர்ந்தது.இப்பிரச்னையால், 20 நிமிடம் அங்கு ஓட்டுப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X