பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்பதிவு தினத்தன்றும் தீவிர வாகன சோதனை

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
உத்திரமேரூர் : சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு தினமான நேற்றும், தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர், உத்திரமேரூரில், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். சட்டசபை தேர்தலையொட்டி, உத்திரமேரூர் தொகுதிக்கு என, மூன்று நிலையான கண்காணிப்பு குழு, மூன்று பறக்கும் படை குழு என, மொத்தம், ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டு, சுழற்சி முறையில், தொகுதி முழுதும், வாகன சோதனையில் ஈடுபட்டு

உத்திரமேரூர் : சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு தினமான நேற்றும், தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர், உத்திரமேரூரில், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

சட்டசபை தேர்தலையொட்டி, உத்திரமேரூர் தொகுதிக்கு என, மூன்று நிலையான கண்காணிப்பு குழு, மூன்று பறக்கும் படை குழு என, மொத்தம், ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டு, சுழற்சி முறையில், தொகுதி முழுதும், வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த ஏப்., 1 வரை, உத்திரமேரூர் தொகுதியில் மட்டும், வாகன சோதனையில், 32.63 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், தகுந்த ஆவணம் சமர்ப்பித்தோருக்கு, 7.77 லட்சம் ரூபாய் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.இந்நிலையில், ஓட்டுப்பதிவு தினமான நேற்றும், பறக்கும் படையினர், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

உத்திரமேரூர் - காஞ்சிபுரம் சாலை வழியே சென்ற கார், வேன் மட்டுமல்லாமல் இரு சக்கர வாகனம், சரக்கு ஏற்றிச்சென்ற வாகனங்களையும், தீவிரமாக சோதனை செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X