சம்பவம் செய்தி

தமிழ்நாடு

105 வயது முதியவர் 'ஜனநாயக கடமை' 1952 முதல் தவறாமல் ஓட்டு

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
கோவை:கோவையில், 105 வயது முதியவர், 1952ம் ஆண்டு முதல் நேற்று வரை தவறாது வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.கோவை, கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கருப்பராயன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரப்ப கவுண்டர். இவர் கடந்த, 1916 ஜூன், 1ல் பிறந்தவர். தற்போது இவரது வயது 105. விவசாயியான இவருக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர்.கடந்த, 1952ம் ஆண்டு முதல் நேற்று வரை, அனைத்து
 105 வயது முதியவர் 'ஜனநாயக கடமை' 1952 முதல் தவறாமல் ஓட்டு

கோவை:கோவையில், 105 வயது முதியவர், 1952ம் ஆண்டு முதல் நேற்று வரை தவறாது வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

கோவை, கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கருப்பராயன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரப்ப கவுண்டர். இவர் கடந்த, 1916 ஜூன், 1ல் பிறந்தவர். தற்போது இவரது வயது 105. விவசாயியான இவருக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர்.கடந்த, 1952ம் ஆண்டு முதல் நேற்று வரை, அனைத்து தேர்தல்களிலும் தவறாது ஓட்டு அளித்துள்ளார்.

முதியவர் தனது வீட்டில் இருந்து, அருகே இருந்த ஓட்டு சாவடிக்கு நடந்தே சென்று, ஜனநாயக கடமையாற்றினார்.மாரப்ப கவுண்டர் கூறுகையில், 'மக்களுக்கு நல்லது செய்வோரை தேர்வு செய்ய, அனைவரும் கட்டாயம் ஓட்டு அளிக்க வேண்டும்' என்றார்.முதியவர் ஓட்டளித்து வெளியே வரும்போது, '105 வயதானவர் வாக்களித்து செல்கிறார்' என, தேர்தல் நடத்தும் அலுவலர் கூறினார். இதை கேட்ட பணியில் இருந்த இளைஞர்கள் முதியவரின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X