குன்னுார்:குன்னுார் அருவங்காடு அருகே, ஒரு பள்ளியில் நேற்று காலை ஓட்டுப்பதிவுக்கு தயாராகி வந்தனர்.
இந்நிலையில், அங்கு தேர்தல் அலுவலராக பணியாற்றிய ஒருவர், ஏற்கனவே பரிசோதனை செய்ததில், அவருக்கு 'கொரோனா பாசிடிவ்' என, தகவல் வந்தது.தொடர்ந்து சுகாதாரத் துறை சார்பில், 108 ஆம்புலன்ஸில் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அந்த மையத்தில் கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, மாற்று அலுவலரால் தேர்தல் பணி துவங்கப்பட்டது.
மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறுகையில்,'' குறிப்பிட்ட அலுவலர் ஏற்கனவே, கொரோனா தடுப்புக்கான, முதல் 'டோஸ்' ஊசி போட்டுள்ளார். இரண்டாம் டோஸ் ஊசி போடவில்லை. அதனால், அவருக்கு கொரோனா வர வாய்ப்பு உள்ளது.ஆனால், மூச்சு திணறல் போன்ற பாதிப்பு வராது. அவர் கூடலுார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப் பட்டு உள்ளார். நல்ல நிலையில் உள்ளார்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE