இயந்திரங்கள் பழுது: ஓட்டுப்பதிவு தாமதம்| Dinamalar

தமிழ்நாடு

இயந்திரங்கள் பழுது: ஓட்டுப்பதிவு தாமதம்

Added : ஏப் 06, 2021
Share
விருத்தாசலம் : விருத்தாசலம் தொகுதியில் ஆங்காங்கே மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதானதால், ஓட்டுப்பதிவு சிறிது நேரம் பாதித்தது. விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் நேற்று காலை 7:00 மணி முதல், ஓட்டுப்பதிவு துவங்கியது. அப்போது, கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி, திரு.வி.க., நகர் சரஸ்வதி மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட சில பகுதிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
 இயந்திரங்கள் பழுது: ஓட்டுப்பதிவு தாமதம்

விருத்தாசலம் : விருத்தாசலம் தொகுதியில் ஆங்காங்கே மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதானதால், ஓட்டுப்பதிவு சிறிது நேரம் பாதித்தது.

விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் நேற்று காலை 7:00 மணி முதல், ஓட்டுப்பதிவு துவங்கியது. அப்போது, கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி, திரு.வி.க., நகர் சரஸ்வதி மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட சில பகுதிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் செயல்படவில்லை. சில மையங்களில் இயந்திரங்களில் ஓட்டுப்பதிவின் போது 'பீப்' சவுண்ட் கேட்கவில்லை போன்ற புகார்கள் எழுந்தன.தகவலறிந்த பொறியாளர்கள் விரைந்து சென்று, இயந்திரங்களை உடனுக்குடன் சீரமைத்து, ஓட்டுப்பதிவை சீராக்கினர்.இதனால், விருத்தாசலம் நகரம், ஊரக பகுதிகளில் 10 முதல் 30 நிமிடம் வரை ஓட்டுப்பதிவு தாமதமானது. அப்போது, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X