வாலாஜாபாத் : சட்டசபை தேர்தலுக்காக, கூடுதல் ஓட்டுச்சாவடி ஏற்படுத்தப்பட்டும், மணியாட்சி கிராம மக்கள், 4 கி.மீ., நடந்து சென்று ஓட்டளித்தனர்.
காஞ்சிபுரம் சட்டசபை தொகுதியில், 329 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. 107 ஓட்டுச்சாவடி இந்நிலையில், தேர்தல் ஆணையம், 1,000 வாக்காளர்களுக்கு ஓர் ஓட்டுச்சாவடி என்ற அடிப்படையில், 107 ஓட்டுச்சாவடிகள் கூடுதலாக்கியது. அதன்படி, காஞ்சிபுரம் சட்டசபை தொகுதியில் மொத்தம், 436 ஓட்டுச்சாவடிகளில், நேற்று, ஓட்டுப்பதிவு துவங்கியது.இதில், ஊவேரி ஊராட்சியைச் சேர்ந்த புத்தேரி மற்றும் மணியாட்சி என, இரு துணை கிராமங்களைச் சேர்ந்த மக்கள், 4 கி.மீ., நடந்து சென்று, ஊவேரி ஓட்டுச்சாவடியில், நேற்று ஓட்டளித்து வந்தனர்.
100 சதவீதம் : இது குறித்து, மணியாட்சி வாக்காளர்கள் கூறியதாவது:மணியாட்சி கிராமத்தில் இருப்போர், சட்டசபை மற்றும் உள்ளாட்சி ஆகிய தேர்தலில் ஓட்டளிக்க வேண்டும் எனில், 4 கி.மீ., ஊவேரி கிராமத்திற்கு சென்று ஓட்டளிக்க வேண்டும். இங்கிருந்து, போதிய பஸ் வசதி இல்லை. வாகனங்கள் வைத்திருப்போர், வாகனங்களில் சென்று ஓட்டளிக்கின்றனர். வாகன வசதி இல்லாதோர், நடந்து சென்று ஓட்டளிக்கின்றனர். தேர்தல் ஆணையம், 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என, அறிவுரை வழங்குகிறது. அதற்கு ஏற்ப வசதிகளை ஏற்படுத்துவதில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE