பொது செய்தி

தமிழ்நாடு

வணிக நிறுவனங்கள் மூடல் சாலைகள் 'வெறிச்'

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
கடலுார் : சட்டசபை தேர்தலையொட்டி கடலுார் மாவட்டத்தில் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மூடப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. சட்டசபை தேர்தலில் 100 சதவீதம் ஓட்டளிப்பதை உறுதி செய்யும் வகையில் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டுமென

கடலுார் : சட்டசபை தேர்தலையொட்டி கடலுார் மாவட்டத்தில் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மூடப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

சட்டசபை தேர்தலில் 100 சதவீதம் ஓட்டளிப்பதை உறுதி செய்யும் வகையில் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது.அதன்படி, கடலுார் மாவட்டத்தில் பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்களும், பிரதான சாலைகளில் பெரும்பாலான வணிக நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன.ஒரு சில பழக்கடைகள், ஓட்டல், டீக்கடைகள், மருந்தகங்கள் வழக்கம் போல் திறந்திருந்தன. பயணிகள் எண்ணிக்கை குறைவு காரணமாக அரசு மற்றும் தனியார் பஸ்கள் குறைந்த அளவே இயக்கப்பட்டன.

வணிக நிறுவனங்கள் மூடல் மற்றும் குறைந்த பஸ்கள் இயக்கம் காரணமாக மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X