அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் பழனிசாமி., சொந்த ஊரில் ஓட்டு

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
இடைப்பாடி:முதல்வர் பழனிசாமி., சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில், வரிசையில் நின்று ஓட்டு போட்டார்.முதல்வர் பழனிசாமி., சேலம் மாவட்டம், இடைப்பாடி சட்டசபை தொகுதியில், ஏழாம் முறையாக போட்டியிடுகிறார்.அ.தி.மு.க.,வின் முதல்வர் வேட்பாளராக உள்ள இவர், இடைப்பாடி தொகுதியில் உள்ள, தன் சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் உள்ள வீட்டில், நேற்று முன்தினம் இரவு தங்கினார்.தன் வீடு அருகில் உள்ள
 முதல்வர் பழனிசாமி., சொந்த ஊரில் ஓட்டு

இடைப்பாடி:முதல்வர் பழனிசாமி., சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில், வரிசையில் நின்று ஓட்டு போட்டார்.

முதல்வர் பழனிசாமி., சேலம் மாவட்டம், இடைப்பாடி சட்டசபை தொகுதியில், ஏழாம் முறையாக போட்டியிடுகிறார்.அ.தி.மு.க.,வின் முதல்வர் வேட்பாளராக உள்ள இவர், இடைப்பாடி தொகுதியில் உள்ள, தன் சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் உள்ள வீட்டில், நேற்று முன்தினம் இரவு தங்கினார்.

தன் வீடு அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பின், வீட்டில் எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா, அவரது தாய் தவுசாயம்மாள் படங்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்து, முதல்வர், அவரது மனைவி ராதா, மகன் மிதுன்குமார், மருமகள் திவ்யா, பேரன் ஆதித் ஆகியோருடன், சிலுவம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஓட்டுச்சாவடி மையத்துக்கு நடந்து சென்றார்.

காலை, 10:45 மணிக்கு, வரிசையில் நின்று, ஓட்டு போட்டார். அதேபோல், அவரது குடும்பத்தினரும் ஓட்டு போட்டனர்.பின், நிருபர்களிடம் பழனிசாமி., கூறுகையில், ''இத்தேர்தலில், மக்கள் அனைவரும் ஓட்டு போட்டு, தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X