செங்குன்றம் : தேர்தல் காரணமாக, உணவகங்கள் பல மூடப்பட்டதால், உணவு கிடைக்காமல், தேர்தல் பணியில் ஈடுபட்டோர் பலர், சிரமத்திற்கு ஆளாயினர்.
சென்னை புறநகர் பகுதிகளில் வழக்கமாக திறந்திருக்கும், சாலையோர உணவகம், சிறிய ஓட்டல்களில் பெரும்பாலானவை நேற்று மூடப்பட்டிருந்தன.இதற்கு காரணம், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசியல் கட்சியினர், தங்களுக்கு தேவையான உணவு வாங்கினாலும், அதற்குரிய முழு தொகையை கொடுக்கமாட்டார்கள்.அதே போன்று, காவல் மற்றும் வருவாய் துறையினரிடத்திலும், உரிய பணத்தை பெற முடியாது. இது தவிர கடனாகவோ, இலவசமாகவோ உணவுப்பொருட்களை கொடுக்காவிட்டால், வாக்குவாதம், தகராறு ஏற்பட்டு, அதற்காகவும், போலீசாரிடம் அலைய நேரிடும் என, பலரும் கடைகளை திறக்காமல் இருந்து விட்டனர்.
இதனால், ஓட்டல் மற்றும் உணவகங்களை நம்பிய தொழிலாளர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்டவர்கள் என பலரும், உணவு கிடைக்காமல் டீ, காபி, பிஸ்கட் உள்ளிட்டவற்றை சாப்பிட்டு சமாளித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE