அரசியல் செய்தி

தமிழ்நாடு

நல்லாட்சி தொடர வேண்டும் பா.ம.க., ராமதாஸ் விருப்பம்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
திண்டிவனம்:''கருத்துக் கணிப்பிற்கு மக்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மரகதாம்பிகை ஆரம்பப் பள்ளி ஓட்டுச்சாவடியில், , பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், குடும்பத்தினருடன் ஓட்டு போட்டார்.பின், அவர் அளித்த பேட்டி:நான், ஏழாவது முறையாக, சட்டசபை தேர்தலில் ஓட்டு

திண்டிவனம்:''கருத்துக் கணிப்பிற்கு மக்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மரகதாம்பிகை ஆரம்பப் பள்ளி ஓட்டுச்சாவடியில், , பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், குடும்பத்தினருடன் ஓட்டு போட்டார்.பின், அவர் அளித்த பேட்டி:

நான், ஏழாவது முறையாக, சட்டசபை தேர்தலில் ஓட்டு போட்டுள்ளேன். கடந்த நான்கு ஆண்டில் நடந்தது, நல்லாட்சி மட்டுமல்ல; நிம்மதியான ஆட்சியும் கூட.மக்கள் மகிழ்ச்சியோடும், பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்புடன் நடமாடும் வகையில், நல்லாட்சியாக உள்ளது.இந்த நல்லாட்சி தொடர வேண்டும் என்ற எண்ணத்தில், மக்கள் ஓட்டு போடுகின்றனர்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், பாராட்டும் வகையில் சிறப்பாக உள்ளன. கருத்துக் கணிப்பிற்கு மக்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.தமிழகத்தை ஆண்ட காமராஜர், பக்தவச்சலம், அண்ணாதுரை ஆகியோர், நாகரிகமாக பேசுவர். தற்போது, தனி நபர் தாக்குதல் அதிகரித்துள்ளது.கட்சியின் கொள்கையை, தேர்தல் அறிக்கையை விமர்சிக்கலாம். தனி நபரை, குடும்பத்தை, பெண்ணை, தாயை இழிவுபடுத்தி பேசுவது சரியல்ல.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X