சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓட்டை மாற்றி போட்டதாக கூறிய முதியவரால் பரபரப்பு

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
சிதம்பரம், : சிதம்பரம் அருகே முதியவருக்கு உதவிய இளைஞர், முதியவர் கூறிய சின்னத்தில் ஓட்டு போடாமல் மாற்றிப் போட்டதாக கூற பரபரப்பு நிலவியது. சிதம்பரம் மணலுார் பகுதியைச் சேர்ந்தவர் ராமு, 70; இவர் லால்புரம் ஓட்டுப்பதிவு மையத்தில் ஓட்டு போடுவதற்கு உதவியாக இளைஞர் ஒருவரை அழைத்து வந்தார்.ஓட்டுப்பதிவு இயந்திரம் அருகே சென்றபோது, முதியவர் கூறிய பொத்தானை அழுத்தாமல் வேறு

சிதம்பரம், : சிதம்பரம் அருகே முதியவருக்கு உதவிய இளைஞர், முதியவர் கூறிய சின்னத்தில் ஓட்டு போடாமல் மாற்றிப் போட்டதாக கூற பரபரப்பு நிலவியது.

சிதம்பரம் மணலுார் பகுதியைச் சேர்ந்தவர் ராமு, 70; இவர் லால்புரம் ஓட்டுப்பதிவு மையத்தில் ஓட்டு போடுவதற்கு உதவியாக இளைஞர் ஒருவரை அழைத்து வந்தார்.ஓட்டுப்பதிவு இயந்திரம் அருகே சென்றபோது, முதியவர் கூறிய பொத்தானை அழுத்தாமல் வேறு சின்னத்திற்கு அந்த இளைஞர் பொத்தானை அழுத்தியுள்ளார்.பூத்தில் இருந்து வெளியேறிய முதியவர் ராமு, நான் கூறிய சின்னத்தில் போடாமல் வேறு சின்னத்து பொத்தானை அழுத்தி விட்டதாக கூறினார். இதனையறிந்த கட்சிக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு இரு பிரிவினர்களாக மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டது.

தகவலறிந்த சப் கலெக்டர் மதுபாலன் சம்பவ இடத்திற்கு வந்து சமாதானம் செய்தார். மேலும், போலீசார் அங்கிருந்தவர்களை விரட்டியடித்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X