பூத் வாரியாக உதயநிதி விசிட்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பூத்' வாரியாக உதயநிதி 'விசிட்'

Added : ஏப் 06, 2021
Share
சென்னை:சென்னை, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில், உதயநிதி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, அ.தி.மு.க., கூட்டணி கட்சியான பா.ம.க.,வின் கசாலி போட்டியிடுகிறார்.உதயநிதி, நேற்று தொகுதியில் உள்ள ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் சென்று, தி.மு.க., முகவர்களிடம், ஓட்டுப்பதிவு விபரங்களை கேட்டறிந்தார்.அவருடன், கட்சியினரும் ஓட்டுச்சாவடிக்குள் நுழைய முயன்றனர். ஆனால்,

சென்னை:சென்னை, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில், உதயநிதி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, அ.தி.மு.க., கூட்டணி கட்சியான பா.ம.க.,வின் கசாலி போட்டியிடுகிறார்.

உதயநிதி, நேற்று தொகுதியில் உள்ள ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் சென்று, தி.மு.க., முகவர்களிடம், ஓட்டுப்பதிவு விபரங்களை கேட்டறிந்தார்.அவருடன், கட்சியினரும் ஓட்டுச்சாவடிக்குள் நுழைய முயன்றனர். ஆனால், ஓட்டுச்சாவடி அதிகாரிகளும், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும், உதயநிதி, அவரின் தலைமை ஏஜன்ட், வட்ட செயலர் உள்ளிட்ட, மூன்று, நான்கு பேரை மட்டும் அனுமதித்தனர்.

உதயநிதியை பார்த்ததும், முகவர்கள், வரிசையில் நின்றிருந்த வாக்காளர்களில், முதல் முறையாக ஓட்டளிக்க வந்திருந்தவர்களை, அறிமுகம் செய்தனர். அவர்களுக்கு, உதயநிதி வணக்கம் தெரிவித்தார்.அதில் சிலர், உதயநிதியுடன், போட்டோ எடுக்க முயன்றனர். 'ஓட்டுச்சாவடிக்குள் போட்டோ எடுக்கக் கூடாது' என்றபடியே, உதயநிதி கிளம்பினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X