சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடி குறித்து ம.நீ.ம., வேட்பாளர் புகார்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
வியாசர்பாடி : வியாசர்பாடியில், அடிப்படை வசதியில்லாத ஓட்டுச்சாவடி குறித்து, ம.நீ.ம., வேட்பாளர் புகார் அளித்தார். பெரம்பூர் தேர்தல் நடத்தும் அதிகாரி ராஜகோபாலனிடம், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பொன்னுசாமி அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:வியாசர்பாடி, அம்பேத்கர் கல்லுாரியில் உள்ள ஓட்டுச்சாவடி எண் - 238, சுகாதாரமற்ற முறையில் கழிவு நீர் ஓடும் இடத்தில்

வியாசர்பாடி : வியாசர்பாடியில், அடிப்படை வசதியில்லாத ஓட்டுச்சாவடி குறித்து, ம.நீ.ம., வேட்பாளர் புகார் அளித்தார்.

பெரம்பூர் தேர்தல் நடத்தும் அதிகாரி ராஜகோபாலனிடம், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பொன்னுசாமி அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:வியாசர்பாடி, அம்பேத்கர் கல்லுாரியில் உள்ள ஓட்டுச்சாவடி எண் - 238, சுகாதாரமற்ற முறையில் கழிவு நீர் ஓடும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.மேலும், பெரம்பூர் தொகுதியில் உள்ள, 99 சதவீத ஓட்டுச்சாவடிகளில் தண்ணீர் வசதி செய்யப்படவில்லை.பொதுமக்களுக்கு, தேர்தல் கமிஷன் முறையாக, 'பூத் சிலிப்' வழங்காததாலும், பொதுமக்களுக்கு உதவ அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், 200 மீட்டருக்கு அப்பால் தான், டேபிள் போட்டு அமர வேண்டும் என்பதால், பெரம்பூர் சட்டசபை தொகுதியில் பல்வேறு ஓட்டுச்சாவடிகளில், பொதுமக்கள் கடுமையாக அவதியடைந்தனர்.

அதுமட்டுமின்றி, கொரோனா நோய்த்தொற்று காரணமாக, ஓட்டுச்சாவடிகள் பிரிக்கப்பட்டது குறித்து, பொதுமக்களுக்கு முறையாக தெரிவிக்காததால், முதியோர், மாற்றுத்திறனாளிகள் அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X