பொது செய்தி

தமிழ்நாடு

விளையாட்டு மைதானம் அமைக்க எதிர்பார்ப்பு

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, சென்றாம்பாளையத்தில், 26 ஆயிரம் ரூபாய் செலவில் இளைஞர் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.தேவராயபுரம் ஊராட்சிக்குட்பட்ட சென்றாம்பாளையத்தில், இளைஞர்கள் கைப்பந்து விளையாட்டில் ஆர்வமாக இருந்தனர். இதற்காக விளையாட்டு மைதானம் இல்லாமல் இருந்தது.இப்பகுதியில், விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என, ஊராட்சி நிர்வாகத்துக்கு இளைஞர்கள்
 விளையாட்டு மைதானம் அமைக்க எதிர்பார்ப்பு

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, சென்றாம்பாளையத்தில், 26 ஆயிரம் ரூபாய் செலவில் இளைஞர் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.தேவராயபுரம் ஊராட்சிக்குட்பட்ட சென்றாம்பாளையத்தில், இளைஞர்கள் கைப்பந்து விளையாட்டில் ஆர்வமாக இருந்தனர். இதற்காக விளையாட்டு மைதானம் இல்லாமல் இருந்தது.இப்பகுதியில், விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என, ஊராட்சி நிர்வாகத்துக்கு இளைஞர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, 26 ஆயிரம் ரூபாய் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அம்மா இளைஞர் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.மேலும், இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்காக இரும்பு பார் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. மைதானத்தில் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்தும், கைப்பந்து விளையாடியும் வருகின்றனர்.இதேபோல், கிணத்துக்கடவு ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில், கைப்பந்து விளையாடுவதற்காக இளைஞர் விளையாட்டு மைதானம் அமைக்க, அந்தந்த ஊராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X