பெண்ணாடம் : பெண்ணாடத்தில் கள்ள ஓட்டு போடப்பட்டதாகக்கூறி, அரசியல் கட்சியினர் ஓட்டுச்சாவடி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
பெண்ணாடம், அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தஸ்தகீர், 55; இவர், நேற்று மாலை 5:00 மணியளவில் அதே பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடி மையத்தில் ஓட்டு போட வந்தார். அப்போது, அவரது ஓட்டு ஏற்கனவே பதிவாகி விட்டதாக தெரிவித்தனர்.இதனால், அதிர்ச்சியடைந்த தஸ்தகீர், மற்றும் அங்கிருந்த அரசியல் கட்சியினர், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், மாலை 6:50 மணியளவில் அவருக்கு தனியாக படிவம் வழங்கப்பட்டு, அதில் தன ஓட்டை பதிவு செய்தார். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE