கொரட்டூர் : மாநகர பேருந்து பயணியருக்கான நிழற்குடையின் கூரை மற்றும் இருக்கை மாயமானதால், பயணியர் வெயிலில் அவதிப்படுகின்றனர்.
சென்னை வடக்கு கொரட்டூர், 200 அடி சாலையில், கெனால் சாலை சந்திப்பு அருகே, மாநகர பேருந்து பயணியருக்காக, மாநகராட்சி மூலம், இரண்டு ஆண்டுகளுக்கு முன், 12 லட்சம் ரூபாய் செலவில், 'ஸ்டீல்' உலோகத்தாலான நிழற்குடை அமைக்கப்பட்டது.தற்போது, அந்த நிழற்குடையின் கூரை மாயமாகி விட்டது. கூரை மட்டுமின்றி, நிழற்குடையின் ஒருபுறத்தில் இருந்த, பயணியர் அமரும் இருக்கையும் காணவில்லை.இதனால், பயணியர் வெயில், மழையில் ஒதுங்க இடமின்றி, அங்கேயே காத்திருக்கும் நிலை உள்ளது.
நல்ல நிலையில் உள்ள நிழற்கு டையை, சிறு கடை வியாபாரிகள் ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். இதை, மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்வதில்லை.இதனால், கூரை மற்றும் இருக்கையின்றி சேதமடைந்துள்ள நிழற்குடை, முழுவதுமாக காணாமல் போகும் முன், அவற்றை சீரமைக்க வேண்டுமென, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE