சென்னை:''மக்கள் எழுச்சியுடன் ஓட்டு போட வருகின்றனர்; தேர்தல் முடிவு சிறப்பானதாக இருக்கும்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை, மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட, தேனாம்பேட்டை எஸ்.ஐ.டி., கல்லுாரி ஓட்டுச் சாவடியில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, மகன் உதயநிதி, மருமகள் கிருத்திகா ஆகியோருடன் நேற்று காலை, 8:00 மணிக்கு வந்து, ஓட்டு போட்டார்.பின், ஸ்டாலின் அளித்த பேட்டி:ஜனநாயக கடமையாற்ற குடும்பத்துடன் வந்தோம்.
தமிழகம் முழுதும் மக்கள் எழுச்சியுடன் ஓட்டு போட்டு வருவதாக தகவல் வருகிறது. மக்கள், ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையில் இருப்பதை உணர்கிறேன். மே, 2ல் தேர்தல் முடிவும், சிறப்பானதாக இருக்கும் என, நம்புகிறேன்.தோல்வி பயத்தால், கொளத்துார், சேப்பாக்கம் உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில், தேர்தலை நிறுத்த வேண்டும் என, தேர்தல் கமிஷனில், அ.தி.மு.க., புகார் அளித்தது. புகாரை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.இவ்வாறு, ஸ்டாலின் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE