மாவட்டத்தில் ஓட்டு போட்ட 6 கொரோனா நோயாளிகள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் ஓட்டு போட்ட 6 கொரோனா நோயாளிகள்

Added : ஏப் 06, 2021
Share
கடலுார் : கடலுார் மாவட்டத்தில், கொரோனா தொற்று பாதித்தவர்கள் ஓட்டு போடுவதற்காக ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருந்தும் 16 பேரில் 6 பேர் மட்டுமே அழைத்து வரப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மாவட்டத்தில் தொற்றால் பாதித்தவர்கள் 16 பேர் ஓட்டுபோட விருப்பம் தெரிவித்திருந்தனர். தொற்று பாதித்தவர்கள் 6:00 மணிக்கு மேல் இறுதியாக ஓட்டளிக்க, தேர்தல் ஆணையம் ஏற்பாடு

கடலுார் : கடலுார் மாவட்டத்தில், கொரோனா தொற்று பாதித்தவர்கள் ஓட்டு போடுவதற்காக ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருந்தும் 16 பேரில் 6 பேர் மட்டுமே அழைத்து வரப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

மாவட்டத்தில் தொற்றால் பாதித்தவர்கள் 16 பேர் ஓட்டுபோட விருப்பம் தெரிவித்திருந்தனர். தொற்று பாதித்தவர்கள் 6:00 மணிக்கு மேல் இறுதியாக ஓட்டளிக்க, தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது.அதன்படி நேற்று மாலை கடலுார் அரசு மருத்துவமனை மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற கடலுார், பண்ருட்டி, புவனகிரி, சிதம்பரம், திட்டக்குடி தொகுதிகளை சேர்ந்த கொரோனா நோயாளிகள் 6 பேர் கவச உடையுடன் ஆம்புலன்ஸ் மூலம் அந்தந்த ஓட்டுச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அப்போது ஓட்டுச்சாவடிகளில் பணியில் இருந்த ஊழியர்கள், போலீசார் கவச உடை அணிந்திருந்தனர். அவர்கள் ஓட்டு போட்ட பின், ஓட்டுச்சாவடிகளில் கிருமி நாசினி தெளிக்கப் பட்டது.இதற்கிடையே 16 பேர் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் 6 பேர் மட்டுமே அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X