சேதமடைந்த தொட்டி வீணாகிறது குடிநீர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சேதமடைந்த தொட்டி வீணாகிறது குடிநீர்

Added : ஏப் 06, 2021
Share
மாதவரம், : சேதமடைந்த தொட்டியால், தினமும் ஏராளமான குடிநீர் வீணாகிறது.சென்னை, மாதவரம் கண்ணபுரம், பால்பண்ணை சாலையில் தனியார் திருமண மண்டபம் உள்ளது. அதன் நுழைவு வாசலை ஒட்டி, சென்னை குடிநீர் வாரியம், 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட, 'சின்டெக்ஸ்' தொட்டியை மக்களின் பயன்பாட்டிற்கு அமைத்துள்ளது.அந்த தொட்டியில் அடிப் பாகம் சேதமடைந்துள்ளதால், மக்களின் தேவைக்காக தொட்டியில்

மாதவரம், : சேதமடைந்த தொட்டியால், தினமும் ஏராளமான குடிநீர் வீணாகிறது.சென்னை, மாதவரம் கண்ணபுரம், பால்பண்ணை சாலையில் தனியார் திருமண மண்டபம் உள்ளது.

அதன் நுழைவு வாசலை ஒட்டி, சென்னை குடிநீர் வாரியம், 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட, 'சின்டெக்ஸ்' தொட்டியை மக்களின் பயன்பாட்டிற்கு அமைத்துள்ளது.அந்த தொட்டியில் அடிப் பாகம் சேதமடைந்துள்ளதால், மக்களின் தேவைக்காக தொட்டியில் விடப்படும் குடிநீர், தொட்டியின் சேதமடைந்த பகுதி வழியாக வெளியேறி வீணாகிறது. இது குறித்து, அங்குள்ள மக்கள், மாதவரம் குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தும், தொட்டியை அகற்றி, புதிய தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

கோடையில், அத்தியாவசிய தேவைக்காக சேமிக்கப்பட வேண்டிய குடிநீர் வீணடிக்கப் படுவதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X