திட்டக்குடி : திட்டக்குடி அருகே தாங்கள் கூறிய சின்னத்திற்கு ஓட்டு போட மறுத்தவர்களைத் தாக்கி வீடுகளை சூறையாடிய கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், ராமநத்தம் காந்தி நகர் பகுதியில் இந்து ஆதியன் வகுப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். நேற்று காலை ஓட்டு போடச் சென்ற போது அதே பகுதியைச் சேர்ந்த சிலர், நாங்கள் சொல்லும் சின்னத்திற்குத்தான் ஓட்டு போட வேண்டும் என கூறினர்.அதற்கு தனவேல், பெருமாள் ஆகியோர் மறுத்ததால் இருவரையும் தாக்கினர். காயமடைந்த இருவரும் பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் மாலை மீண்டும் 10 பேர் கொண்ட கும்பல், இந்து ஆதியன் மக்கள் வசிக்கும் வீடுகளை சூறையாடி பெண்களைத் தாக்கியது.தகவலறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, அந்த கும்பல் தப்பியோடியது.தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் டி.எஸ்.பி., வெங்கடேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE