ஏ.டி.எம்.,களில் பணம் இல்லை: தொழிலாளர்கள் அப்செட்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
வால்பாறை:வால்பாறை பகுதியில், வங்கி ஏ.டி.எம்.,களில் பணம் இல்லாததால், தொழிலாளர்கள் விரக்தியடைந்தனர்.வால்பாறை மலைப்பகுதியில் உள்ள, பல்வேறு எஸ்டேட் தொழிலாளர்களுக்கு, மாதம் தோறும் 7ம் தேதி, அந்தந்த எஸ்டேட் நிர்வாகத்தின் சார்பில், நேரடியாக சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. மத்திய அரசின் புதிய திட்டத்தின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளாக, தோட்ட தொழிலாளர்களின் சம்பளம், அவர்களது

வால்பாறை:வால்பாறை பகுதியில், வங்கி ஏ.டி.எம்.,களில் பணம் இல்லாததால், தொழிலாளர்கள் விரக்தியடைந்தனர்.வால்பாறை மலைப்பகுதியில் உள்ள, பல்வேறு எஸ்டேட் தொழிலாளர்களுக்கு, மாதம் தோறும் 7ம் தேதி, அந்தந்த எஸ்டேட் நிர்வாகத்தின் சார்பில், நேரடியாக சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. மத்திய அரசின் புதிய திட்டத்தின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளாக, தோட்ட தொழிலாளர்களின் சம்பளம், அவர்களது வங்கிக் கணக்கில், வரவு வைக்கப்படுகிறது. இதனையடுத்து தொழிலாளர்கள் வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுத்துவருகின்றனர்.இந்நிலையில், விடுமுறை தினமான நேற்று, வால்பாறை நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, யூனியன் வங்கி ஏ.டி.எம்.,களில் நேற்று பணம் இருப்பு இல்லை. இதனால், பல்வேறு எஸ்டேட் பகுதியிலிருந்து வந்த தொழிலாளர்களும், சுற்றுலாப்பயணிகளும், பணம் எடுக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர். தொழிலாளர்களுக்கு எஸ்டேட் நிர்வாகம் சம்பளம் வழங்கியும், ஏ.டி.எம்.,மில் பணம் இல்லாததால், தொழிலாளர்கள் அவதிக்குள்ளாயினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X