சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓட்டு பதிவு மையங்களை தேடி அலைந்த வாக்காளர்கள் 'ஏமாற்றம்'

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
மாதவரம், : பூத் சிலிப் வழங்காமல், அறிவிப்பு ஏதும் செய்யாமல், வழக்கமான ஓட்டு பதிவு மையங்களில் இருந்து, புதிய மையங்களுக்கு, தங்கள் பெயர் பட்டியலை மாற்றியதால், வாக்காளர்கள் அவதிக்குள்ளாகினர். சென்னை மாதவரம் தொகுதி, 26வது வார்டுக்குட்பட்ட, தேவகி நகர், மேற்கு தணிகாசலம் நகர் ஆகியவற்றில் உள்ள வாக்காளர்கள், அங்குள்ள தனியார் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள, ஓட்டு பதிவு மையத்தில்

மாதவரம், : பூத் சிலிப் வழங்காமல், அறிவிப்பு ஏதும் செய்யாமல், வழக்கமான ஓட்டு பதிவு மையங்களில் இருந்து, புதிய மையங்களுக்கு, தங்கள் பெயர் பட்டியலை மாற்றியதால், வாக்காளர்கள் அவதிக்குள்ளாகினர்.

சென்னை மாதவரம் தொகுதி, 26வது வார்டுக்குட்பட்ட, தேவகி நகர், மேற்கு தணிகாசலம் நகர் ஆகியவற்றில் உள்ள வாக்காளர்கள், அங்குள்ள தனியார் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள, ஓட்டு பதிவு மையத்தில் ஓட்டளிப்பது வழக்கம்.இந்த முறை, அவர்களுக்கான ஓட்டு பதிவு மையம், 33வது வார்டில் உள்ள மற்றொரு தனியார் பள்ளிக்கு மாற்றப்பட்டது. ஆனால், அங்கு சென்றாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை. இதனால், அதிருப்தி அடைந்த அவர்கள், அதிகாரிகளிடம் விசாரித்தனர்.

அப்போது, பழைய மையத்திற்கே சென்று வாக்களியுங்கள் என, அதிகாரிகளால் அறிவுறுத்தப் பட்டனர். இதனால், வாக்காளர்கள் அதிருப்தி அடைந்தனர்.ஒரு மையத்தில், 1,000 க்கும் மேற்பட்ட வாக்காளர் இருந்தால், அதில், 1,000 பேர் மட்டுமே பட்டியலில் பதிவு செய்யப்பட்டு, மற்றவர்கள், வேறொரு ஓட்டு பதிவு மையத்திற்கு மாற்றப்பட்டு உள்ளனர்.கொரோனா பரவலை தவிர்க்க, இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த மாற்றத்தை முறையாக, வாக்காளர்களுக்கு தெரிவிக்கவில்லை.

மேலும், அவர்களுக்கு, புதிய மையத்திற்கான, பூத் சிலிப்பும் வழங்கப்படவில்லை. இதனால், நுாற்றுக்கும் மேற்பட்டோர், வாக்குச்சாவடியை தேடி அலையும் நிலை ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பலர், வெயில் காரணமாக, அலைவதை நிறுத்தி, ஓட்டுப்போடாமலேயே வீடு திரும்பினர். தங்களின் இந்த நிலைக்கு, அதிகாரிகளின் அலட்சியப்போக்கே காரணம் என, குற்றம்சாட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X