பொது செய்தி

தமிழ்நாடு

சோலையாறு நீர்மட்டம் வெறும் 1.77 அடி

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
வால்பாறை:பரம்பிக்குளத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால், சோலையாறு அணையின் நீர்மட்டம், வெறும் 1.77 அடியாக சரிந்தது.வால்பாறையில் இந்த ஆண்டு பெய்த பருவமழையினால், இங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பின. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழையினால் சோலையாறு அணை நிரம்பியது. இதனையடுத்து, சேடல்டேம் வழியாக, பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தொடர்

வால்பாறை:பரம்பிக்குளத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால், சோலையாறு அணையின் நீர்மட்டம், வெறும் 1.77 அடியாக சரிந்தது.வால்பாறையில் இந்த ஆண்டு பெய்த பருவமழையினால், இங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பின. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழையினால் சோலையாறு அணை நிரம்பியது. இதனையடுத்து, சேடல்டேம் வழியாக, பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தொடர் மழையால், பி.ஏ.பி.,அணைகள் அனைத்தும் நிரம்பின.இந்நிலையில், கடந்த ஐந்து மாதத்திற்கும் மேலாக மழைப்பொழிவு குறைந்த நிலையிலும், சோலையாறு அணையிலிருந்து, பரம்பிக்குளம் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுவதாலும், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம், நேற்று காலை,01.77 அடியாக சரிந்தது. இதனிடையே வறட்சியால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X