பொது செய்தி

தமிழ்நாடு

அபாயகரமான மாற்றுப்பாதை : அதிகரிக்கும் விபத்துகள்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி பாலக்காடு ரோடுக்கான மாற்றுப்பாதையாக அறிவிக்கப்பட்டுள்ள கிருஷ்ணா குளம் ரோடு, சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருப்பதால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டை, மீன்கரை ரோட்டுடன் இணைக்கும் ரோடாக உள்ளது கிருஷ்ணா குளம் ரோடு. தற்போது, பாலக்காடு ரோடு வடுகபாளையம் பிரிவில் ரயில்வே மேம்பால பணிகள் நடப்பதால், பாலக்காடு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பாலக்காடு ரோடுக்கான மாற்றுப்பாதையாக அறிவிக்கப்பட்டுள்ள கிருஷ்ணா குளம் ரோடு, சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருப்பதால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டை, மீன்கரை ரோட்டுடன் இணைக்கும் ரோடாக உள்ளது கிருஷ்ணா குளம் ரோடு. தற்போது, பாலக்காடு ரோடு வடுகபாளையம் பிரிவில் ரயில்வே மேம்பால பணிகள் நடப்பதால், பாலக்காடு ரோட்டில் வரும் வாகனங்களுக்கு, கிருஷ்ணா குளம் ரோடு மாற்றுப்பாதையாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த ரோட்டின் வழியே அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்ட பிரதான வினியோக குழாய்கள் கொண்டு வரப்படுகின்றன. குடிநீர் உந்தப்படுவதில் ஏற்படும் அழுத்த மாற்றங்களால், ரோட்டின் கீழ் பதிக்கப்பட்டுள்ள குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. குழாய் சீரமைப்புக்காக, ரோடு அடிக்கடி தோண்டப்படுகிறது. தோண்டிய ரோட்டை சீரமைக்காமல் விட்டு விடுகின்றனர். இதனால், ரோட்டில் அபாயகரமான வளைவுகள் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பள்ளங்கள் காணப்படுகின்றன.இந்தப் பள்ளங்கள் வாகன ஓட்டுனர்கள் பார்வையில் படுவதில்லை. திடீரென எதிர்படும் பள்ளங்களில் இறங்கி, வாகனம் நிலை தடுமாறி விபத்துகள் ஏற்படுகின்றன.எனவே, இந்த மாற்றுப்பாதையை உடனடியாக சீரமைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்; குழாய் உடைப்புகளை தவிர்க்கவும், குழாய் சீரமைப்புக்காக ரோடு தோண்டப்பட்டால், பணி முடிந்தவுடன் சீரமைக்க சம்பந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X