கொளத்துார், : கொளத்துார் தொகுதியில், இரண்டு ஓட்டுச்சாவடிகளில், ஒரு மணி நேரம் ஓட்டுப்பதிவு தாமதமாக துவங்கியது.
சாய்வு தளம் இல்லாததால், முதியோர்கள் அவதியுற்றனர்.கொளத்துார் சட்டசபை தொகுதியில், 424 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன. இந்த தொகுதிக்குட்பட்ட மக்காரம் தோட்டம், அயனாவரம் மண்டல அலுவலகம் உள்ளிட்ட ஓட்டுச்சாவடி மையங்களில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதானதால், ஒரு மணி நேரம் தாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது. ராஜமங்கலம், செந்தில் நகரில் உள்ள தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் அமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடி மையத்தில், சாய்வு தளம் இல்லாததால், முதியோர்கள் அவதியுற்றனர்.
அதேபோல் கொளத்துார், ராஜமங்கலம், முதல் பிரதான சாலை, 2வது பிரதான சாலையில் ஓட்டல்கள் மூடப்பட்டதால், தேர்தல் பணியாளர்கள், பூத் ஏஜன்டுகள் உணவு கிடைக்காமல் தவித்தனர். பல கிலோ மீட்டர் துாரம் அலைந்து, உணவை மொத்தமாக வாங்கி வந்து, பங்கிட்டு சாப்பிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE