பொது செய்தி

தமிழ்நாடு

கோகோ ஊடுபயிர்: மானியத்துக்கு முன்பதிவு செய்யலாம்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி;தென்னைக்கு உகந்த ஊடுபயிரான கோகோ சாகுபடிக்கு மானியம் பெற, விவசாயிகள் முன்பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சியில் தென்னை சாகுபடி அதிகமுள்ளதால், ஊடுபயிராக கோகோ பயிரிட ஏற்ற சூழல் நிலவுகிறது. கோகோ சாகுபடிக்கு, தோட்டக்கலைத் துறை சார்பில் மானியம் வழங்கப்படுகிறது.தோட்டக்கலை உதவி இயக்குனர் வசுமதி கூறியதாவது:ஐஸ்கிரீம், கேக், சாக்லேட்,

பொள்ளாச்சி;தென்னைக்கு உகந்த ஊடுபயிரான கோகோ சாகுபடிக்கு மானியம் பெற, விவசாயிகள் முன்பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சியில் தென்னை சாகுபடி அதிகமுள்ளதால், ஊடுபயிராக கோகோ பயிரிட ஏற்ற சூழல் நிலவுகிறது. கோகோ சாகுபடிக்கு, தோட்டக்கலைத் துறை சார்பில் மானியம் வழங்கப்படுகிறது.தோட்டக்கலை உதவி இயக்குனர் வசுமதி கூறியதாவது:ஐஸ்கிரீம், கேக், சாக்லேட், ஊட்டச்சத்து பானங்கள் உள்ளிட்டவற்றின் மூலப்பொருளாக கோகோ, விளங்குகிறது. இதனால், கோகோவுக்கு, சந்தையில் எப்போதும் தேவை இருக்கிறது.கோகோ, 50 சதவீத நிழலில் வளரும் தன்மை கொண்டது என்பதால், தென்னந்தோப்புகளில் ஊடுபயிராகப் பயிரிட மிகவும் ஏற்றது. 45 ஆண்டுகள் வரை பலன் தரும். தென்னையின் நடுவே கோகோ பயிரிடுவதால், களைகள் கட்டுப்படும்; மண்ணின் ஈரப்பதம் பாதுகாக்கப்படும்; மண் அரிப்பு தடுக்கப்படும். கோகோ இலைகள் உதிர்ந்து மக்குவதால், மண்ணின் அங்ககச்சத்து ஹெக்டருக்கு, 1,000 - 1,200 கிலோ வரை அதிகரிக்கும். கோகோ பழத்தின் ஓடு, உரமாகவும், கால்நடைத் தீவனமாகவும் பயன்படுகிறது. தென்னந்தோப்பில் குளுமையான சூழலும் நிலவும். இதனால், தென்னை மகசூலும் அதிகரிக்கிறது. இப்படி கூடுதல் வருமானம் தருவதுடன், தென்னைக்கும் நன்மைகள் தருவதால், தென்னையின் நண்பன் என, கோகோ அழைக்கப்படுகிறது.முந்திரி, கோகோ மேம்பாட்டுக் கழக இயக்கக உதவியுடன், மானியம் வழங்கப்படுகிறது. கோகோ பயிரிட விரும்பும் விவசாயிகள், தங்கள் பகுதி தோட்டக்கலை அலுவலகங்களை அணுகி முன்பதிவு செய்து கொள்ளலாம். நடப்பு நிதியாண்டில் மானியம் அறிவிக்கப்பட்டவுடன், விவசாயிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X