சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடி முற்றுகை திரு.வி.க.நகரில் பரபரப்பு

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
சென்னை : திரு.வி.க.நகர் தொகுதியில், 323 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன. இங்கு, நேற்று காலை முதல், ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. இந்நிலையில், தொகுதிக்கு உட்பட்ட கன்னிகாபுரத்தில் உள்ள, ஓட்டுச்சாவடி மையங்களில், வாக்காளர்கள் பட்டியலில் இருந்து, அப்பகுதியில் வசிக்கும், பலரது பெயர்கள் நீக்கப்பட்டதாக, குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த, 10க்கும் மேற்பட்ட

சென்னை : திரு.வி.க.நகர் தொகுதியில், 323 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன. இங்கு, நேற்று காலை முதல், ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.

இந்நிலையில், தொகுதிக்கு உட்பட்ட கன்னிகாபுரத்தில் உள்ள, ஓட்டுச்சாவடி மையங்களில், வாக்காளர்கள் பட்டியலில் இருந்து, அப்பகுதியில் வசிக்கும், பலரது பெயர்கள் நீக்கப்பட்டதாக, குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த, 10க்கும் மேற்பட்ட வாக்காளர்கள், கன்னிகாபுரத்தில் உள்ள, 143 மற்றும், 144 ஓட்டுச்சாவடி மையத்தின், நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து, போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கன்னிகாபுரத்தில் இருந்து, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே, மாற்று பகுதிகளில், வீடுகள் மாறிஉள்ளதாக தெரிய வந்தன.

இதையடுத்து, போலீசார் கண்டித்ததை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். இதேபோல், வாக்காளர் பட்டியலில் இருந்து, பலரது பெயர் நீக்கப்பட்டதால், ஓட்டு பதிவு செய்ய முடியாமல், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X