பிராட்வே : வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 100க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
சவுகார்பேட்டை, ஆதியப்பன் தெருவைச் சேர்ந்த வட மாநிலத்தவர், 100க்கும் மேற்பட்டோர், தங்கள் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர். தகவலறிந்து பூக்கடை துணை கமிஷனர் மகேஸ்வரன் விரைந்து வந்து, பொதுமக்களிடம் சமரசம் பேசினார். இதுகுறித்து துறைமுகம் தொகுதி தேர்தல் அலுவலரிடம் முறையிடுமாறு விளக்கினார். இதையடுத்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
அதேபோல், பிராட்வே, அங்கப்பன் தெருவைச் சேர்ந்த, 60க்கும் மேற்பட்டோர், தங்கள் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக கோரியும், துறைமுகம் தொகுதி, பா.ஜ.,வினர் கள்ள ஓட்டு போட முயற்சிப்பதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:துறைமுகம் தொகுதி, பா.ஜ.,வினர் பீஹாரில் இருந்து ஆட்களைக் கொண்டு வந்து, கள்ள ஓட்டு போட முயற்சிக்கின்றனர். எங்கள் ஓட்டுகளும் நீக்கப்பட்டு உள்ளது. இதற்கு தீர்வு வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE