பொது செய்தி

தமிழ்நாடு

கொளுத்தும் கோடை வெயில் குளிர வைக்கும் தடுப்பணை!

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை, ஆழியாறு தடுப்பணை பகுதிகளில், கோடை வெயிலுக்கு குளித்து மகிழ, அதிக அளவிலான இளைஞர்கள், சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை, ஆழியாறு, பொன்னாலம்மன்துறை, அம்பராம்பாளையம் பகுதிகள் வழியாக, ஆழியாறு ஆற்றுநீர் பயணிக்கிறது. இப்பகுதிகளில், பொதுப்பணித்துறை சார்பில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. கோடை காலத்திலும்
 கொளுத்தும் கோடை வெயில்  குளிர வைக்கும் தடுப்பணை!

ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை, ஆழியாறு தடுப்பணை பகுதிகளில், கோடை வெயிலுக்கு குளித்து மகிழ, அதிக அளவிலான இளைஞர்கள், சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை, ஆழியாறு, பொன்னாலம்மன்துறை, அம்பராம்பாளையம் பகுதிகள் வழியாக, ஆழியாறு ஆற்றுநீர் பயணிக்கிறது. இப்பகுதிகளில், பொதுப்பணித்துறை சார்பில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. கோடை காலத்திலும் இந்த தடுப்பணைகளில் நீர் நிரம்பி இருப்பதால், வெயிலை சமாளிக்க, சிறுவர்கள், இளைஞர்கள் இந்த தடுப்பணைகளில் குளிப்பது வழக்கம். தற்போது, கொளுத்தும் கோடையைச் சமாளிக்க, ஏராளமானோர், ஆனைமலை, ஆழியாறு, பொன்னாலம்மன்துறை, அம்பராம்பாளையம் பகுதிகளுக்கு வந்து ஆற்றுநீரில் குளித்து மகிழ்கின்றனர். இதுவரையில், ஆழியாறு, ஆனைமலை, பொன்னாலம்மன்துறை தடுப்பணைகளில் மூழ்கி, 330க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். தடுப்பணைகளில் குளிப்பதற்கு தடை விதித்து, பொதுப்பணித்துறை சார்பில், அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த எச்சரிக்கைகளை யாரும் மதிப்பதாக இல்லை. போலீசார், பொதுப்பணித்துறையினர், அவ்வப்போது தடுப்பணை பகுதிகளில் ரோந்து சென்று, கூட்டமாகவும், ஆழமான பகுதிகளில் குளிப்பதை தடுக்கவும், கண்காணிக்கவும் வேண்டும். சுற்றுலா பயணிகள் தடுப்பணைகளில் மிகவும் பாதுகாப்பான முறையில் குளிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X