பொது செய்தி

தமிழ்நாடு

கரிவரதராஜ பெருமாளுக்கு திருவோண சிறப்பு பூஜை

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:காட்டம்பட்டிபுதுார் ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் கரிவரதராஜபெருமாள் கோவிலில் நேற்று, திருவோணம் நட்சத்திர சிறப்பு பூஜை நடந்தது.நெகமம் அருகே, காட்டம்பட்டிபுதுாரில் ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் கரிவரதராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், வாரத்தின் அனைத்து நாட்களிலும் சிறப்பு பூஜை நடக்கிறது. பூஜையில், வடசித்துார், நெகமம், பொள்ளாச்சி மற்றும் காட்டம்பட்டி
 கரிவரதராஜ பெருமாளுக்கு திருவோண சிறப்பு பூஜை

பொள்ளாச்சி:காட்டம்பட்டிபுதுார் ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் கரிவரதராஜபெருமாள் கோவிலில் நேற்று, திருவோணம் நட்சத்திர சிறப்பு பூஜை நடந்தது.நெகமம் அருகே, காட்டம்பட்டிபுதுாரில் ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் கரிவரதராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், வாரத்தின் அனைத்து நாட்களிலும் சிறப்பு பூஜை நடக்கிறது. பூஜையில், வடசித்துார், நெகமம், பொள்ளாச்சி மற்றும் காட்டம்பட்டி சுற்றுப்பகுதி மக்கள் வழிபட்டு செல்கின்றனர். நேற்று, பெருமாளுக்கு திருவோண நட்சத்திர சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக பெருமாளுக்கு, 16 வகை திருமஞ்சனம் சாத்தப்பட்டது, தொடர்ந்து, அலங்கார பூஜையும், மதியம் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. அதேபோல,ஆனைமலை அடுத்த, அர்த்தநாரிபாளையம் அழகு திருமலைராயப் பெருமாள் கோவிலிலும், குகைப் பெருமாள் கோவிலிலும் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X