பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் முடிஞ்சாச்சு: விவசாயிகள் நிம்மதி

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:தேர்தல் பிரசாரத்தால், கடந்த ஒரு வாரமாக விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் தவித்த விவசாயிகள், தேர்தல் நடந்து முடிந்ததால் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.வேட்பாளர் வருகையின் போதும், தேர்தல் பிரசார கூட்டங்களிலும் பிரமாண்டம் காட்ட, அரசியல் கட்சியினர் அதிகளவு ஆட்களை திரட்டுவது வழக்கம். இதற்காக, மது, உணவு மற்றும் பணம் கொடுத்து ஆட்களை திரட்டிச்

பொள்ளாச்சி:தேர்தல் பிரசாரத்தால், கடந்த ஒரு வாரமாக விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் தவித்த விவசாயிகள், தேர்தல் நடந்து முடிந்ததால் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.வேட்பாளர் வருகையின் போதும், தேர்தல் பிரசார கூட்டங்களிலும் பிரமாண்டம் காட்ட, அரசியல் கட்சியினர் அதிகளவு ஆட்களை திரட்டுவது வழக்கம். இதற்காக, மது, உணவு மற்றும் பணம் கொடுத்து ஆட்களை திரட்டிச் செல்வர்.பொள்ளாச்சி தொகுதியில் இத்தேர்தலில் கடுமையான போட்டி நிலவுவதால், பிரதான கட்சிகள் ஆள் திரட்டுவதில் தீவிரம் காட்டின. இதனால், கிராமங்களில் உச்சகட்ட பிரசாரம் நடந்த கடைசி சில நாட்களில், விவசாய கூலித் தொழிலாளர்களை பணம் கொடுத்து கூட்டிச் சென்று விட்டனர்.கட்சியினருடன் வெயிலில் அலைந்த அலுப்பில், பிரசாரம் முடிந்தும் அவர்கள் விவசாய பணிக்கு திரும்பவில்லை. நேற்றும் தேர்தலுக்காக பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால், ஒரு வாரத்துக்கும் மேலாக விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, விவசாயிகள் கவலை புலம்பி வந்தனர்.ஒரு வழியாய் தேர்தல் நடந்து முடிந்து விட்டதால், ஆட்கள் வேலைக்கு திரும்ப துவங்குவர்; தொய்வில் இருந்த விவசாய பணிகள் இயல்புக்கு திரும்பும் என, விவசாயிகள் நிம்மதி தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X