சென்னை:'ஓட்டு அளிப்பதை சுகமான அனுபவமாக மாற்றிய, தேர்தல் ஆணையத்திற்கு என் பாராட்டுக்கள்' என, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:சட்டசபை தேர்தலில், திண்டிவனம், ஸ்ரீமரகதாம்பிகை பள்ளி ஓட்டுச்சாவடியில், என் ஓட்டுரிமையை செலுத்தி, ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினேன். என் குடும்பத்தினரும், என்னுடன் ஓட்டு அளித்தனர்.
ஓட்டு அளிக்க வரும் வாக்காளர்களுக்கு நிழல் தரும் பந்தல், உடல் வெப்பநிலை அறிய சோதனை, கிருமி நாசினி, கையுறை உள்ளிட்ட, பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சந்தனம், கற்கண்டு, மலர்கள் ஆகியவற்றை வழங்கி, அளிக்கப்பட்ட வரவேற்பு, தேர்தலை திருவிழாவாக மாற்றியிருக்கிறது.
ஓட்டு அளிப்பதை சுகமான அனுபவமாக மாற்றிய, தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டுக்கள். ஓட்டு அளித்த மக்களின் தீர்ப்பு, இன்றைய ஆட்சி, நாளையும் தொடருவதற்கானதாகவே இருக்கும். வாக்காளர்களுக்கு நன்றி.இவ்வாறு, அன்புமணி கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE