சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உடுமலை, மடத்துக்குளத்தில் இயந்திரம் பழுது ; ஓட்டுப்பதிவு தாமதம்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை சட்டசபை தொகுதிக்குட்பட்ட, பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், அமைக்கப்பட்டிருந்த, 194ஏ எண், ஓட்டுச்சாவடி இயந்திரத்தில், பிரச்னை ஏற்பட்டது. ஏற்கனவே, 40 வாக்காளர்கள் வரை ஓட்டுப்பதிவு செய்த நிலையில், அந்த ஓட்டுகள் எதுவும் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவாகாமல் இருந்தது, கண்டறியப்பட்டது.இதையடுத்து, உடுமலை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா, உதவி
 உடுமலை, மடத்துக்குளத்தில் இயந்திரம் பழுது ; ஓட்டுப்பதிவு தாமதம்

உடுமலை:உடுமலை சட்டசபை தொகுதிக்குட்பட்ட, பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், அமைக்கப்பட்டிருந்த, 194ஏ எண், ஓட்டுச்சாவடி இயந்திரத்தில், பிரச்னை ஏற்பட்டது. ஏற்கனவே, 40 வாக்காளர்கள் வரை ஓட்டுப்பதிவு செய்த நிலையில், அந்த ஓட்டுகள் எதுவும் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவாகாமல் இருந்தது, கண்டறியப்பட்டது.

இதையடுத்து, உடுமலை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராமலிங்கம் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். பின், வேறு இயந்திரம் கொண்டு வரப்பட்டது. தங்கள் ஓட்டுகளை பதிவு செய்து திரும்பிய, 40 வாக்காளர்களையும் தேடிப்பிடித்து, மீண்டும் ஓட்டுப்பதிவு செய்ய வைத்தனர். இதனால், இரண்டு மணி நேரம் வரை, ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது

.மடத்துக்குளம்: மடத்துக்குளம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, எரிசனம்பட்டி கிராம வாக்காளர்களுக்காக, ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், மூன்று ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், 56ம் எண்ணுடைய ஓட்டுச்சாவடியில், ஓட்டுப்பதிவு இயந்திரம் வேலை செய்யவில்லை.அரை மணி நேரம் வரை போராடியும், இயந்திரம், 'ஆன்' ஆகவில்லை.

பின்னர், மற்றொரு இயந்திரம் கொண்டு வரப்பட்டு ஓட்டுப்பதிவு துவங்கியது. இப்பிரச்னை யால், அந்த ஓட்டுச்சாவடியில், இரண்டு மணி நேரம், தாமதமாக, ஓட்டுப்பதிவு துவங்கியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X