ராமநாதபுரம் : சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ராமநாதபுரம் தொகுதியில்காலை 7:00மணி முதல் மக்கள் ஓட்டளிக்க குவிந்தனர். அனைத்துநடவடிக்கைகளும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டசபை தொகுதிகளில்அ.தி.மு.க., பா.ஜ., தி.மு.க., ம.நீ.ம., தே.மு.தி.க., நாம்தமிழர் கட்சி உள்ளிட்டஅரசியல் கட்சியினர், சுயேச்சைகள் என மொத்தம் 172 வேட்பாளர்கள்போட்டியிடுகின்றனர். நேற்று ஏப்.,7 ஓட்டுபதிவை முன்னிட்டு முதல்நாளே அனைத்து வாக்குசாவடி மையங்களுக்கு மின்னனுஓட்டுஇயந்திரங்கள், தளவாடப்பொருட்கள், கொரோனா தடுப்புமருத்துவ உபகரணங்கள் அனுப்பிவைக்கப்பட்டது.
நேற்று காலையில் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டு காலை 7:00மணிக்கு ஓட்டளிக்கமக்கள்ஆர்வத்துடன் வந்தனர், முகக்கவசம் இல்லாதவர்களுக்குவழங்கப்பட்டது. சானிடைசர் மூலம் கைகளை கழுவியும், தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்ப பரிசோதனை செய்தபின்வாக்குச்சாவடிகளுக்குள் மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
ராமநாதபுரம்:
மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவரது மனைவி ேஹாஷியா உடன் சுவார்ட் மேல்நிலைபள்ளியில்ஓட்டளித்தார். மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு தள்ளுவண்டியை பயன்படுத்தியும், சிலர் அவர்களாக ஆர்வத்துடன் ஓட்டளித்தனர்.கலெக்டர் கூறுகையில்,‛ மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும்காலை 7:00மணிக்கு ஓட்டுபதிவு தொடங்கிவிட்டது. ஐந்து இடங்களில்ஓட்டுபதிவு இயந்திரம் பழுதானது, சிறித்து காலதாமதம் ஏற்பட்டது.
பழுதானவை உடனடியாக சரிசெய்யப்பட்டது. அமைதியான முறையில் ஓட்டுபதிவு நடந்தது. பதட்டமான 228 ஓட்டுப்பதிவுமையங்களில் மத்திய பாதுகாப்புபடையினர், போலீசார், நுண்பார்வையாளர் உள்ளனர். 828 மையங்கள் வெப் காமிர மூலம்கண்காணிக்கப்பட்டது. பணப்பட்டுவாடாவை தடுத்துள்ளோம்,இதுரை ரூ.2.41கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுகாதாரக்குழுவினர் மூலம் கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றிமக்கள் ஓட்டளிக்க ஏற்பாடு செயப்பட்டுள்ளது,' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE