பொது செய்தி

தமிழ்நாடு

ஜனநாயகத்தை நிலை நிறுத்த ஓட்டளிக்க சத்குரு அறிவுரை

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
கோவை:''ஜனநாயகத்தை நிலை நிறுத்த, தேர்தலை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என, சத்குரு தெரிவித்தார்.தொண்டாமுத்துார் தொகுதி முட்டத்துவயல் பழங்குடியினர் பள்ளியில், ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு, நேற்று ஓட்டு பதிவு செய்தார்.பின்னர், நிருபர்களிடம் சத்குரு கூறியதாவது: ஜனநாயகத்தை நிலை நிறுத்த, தேர்தலை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் யாராக
 ஜனநாயகத்தை நிலை நிறுத்த ஓட்டளிக்க சத்குரு அறிவுரை

கோவை:''ஜனநாயகத்தை நிலை நிறுத்த, தேர்தலை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என, சத்குரு தெரிவித்தார்.

தொண்டாமுத்துார் தொகுதி முட்டத்துவயல் பழங்குடியினர் பள்ளியில், ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு, நேற்று ஓட்டு பதிவு செய்தார்.பின்னர், நிருபர்களிடம் சத்குரு கூறியதாவது: ஜனநாயகத்தை நிலை நிறுத்த, தேர்தலை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் யாராக இருந்தாலும், ஒரு ஓட்டு மட்டும் தான் உள்ளது. இதை அனைவரும் பொறுப்பாக கடைபிடித்து, ஜனநாயக கடமை நிறைவேற்ற வேண்டும்.

'கோவில் அடிமை நிறுத்து' இயக்கத்துக்கு, மூன்று கோடிக்கும் அதிகமானோர் ஆதரவு அளித்து உள்ளனர். இது குறித்து, தமிழக அரசியல் கட்சியினர் பேசி வருகின்றனர். முக்கியமான இரண்டு கட்சிகள், சில நடவடிக்கைகள் எடுத்துள்ளன.'கோவில்களை புனரமைக்க தேவையானதை செய்கிறோம்' என்கிறார்கள். இது, அரசு ஊழியர்களை வைத்து செய்கின்ற வேலை அல்ல. கோவில்கள் உயிரோட்டமாக இருக்க, அவை பக்தி நிறைந்தவர்களின் கரங்களுக்கு செல்ல வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X