பொள்ளாச்சி:பொள்ளாச்சி ஓட்டுச்சாவடிகளுக்கு பொதுமக்கள் ஆர்வமாக ஓட்டு போட வந்ததால் ஓட்டுப்பதிவு விறு, விறுப்பாக நடந்தது.பொள்ளாச்சி சட்டசபை தொகுதி, பொள்ளாச்சி நகரம், வடக்கு ஒன்றியம் மற்றும் தெற்கு ஒன்றியம் சில கிராமங்கள், கிணத்துக்கடவு ஒன்றியம், நெகமம் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.மொத்தம், 2லட்சத்து, 27ஆயிரத்து, 049 பேர் வாக்காளர்களாக உள்ளனர். பொள்ளாச்சி சட்டசபை தொகுதியில், நேற்றுஓட்டுப்பதிவு நடைபெற்றது.காலை, 7:00 மணி முதலே ஓட்டுப்போட மக்கள் ஆர்வம் காட்டினர். நீண்ட வரிசையில் நின்று ஓட்டினை பதிவு செய்தனர்.முதியவர்களும் ஆர்வம்வயது முதிர்ந்த பெரியவர்களும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற ஆர்வமாக தங்களதுஉறவினர்கள் உதவியுடன் ஓட்டுச்சாவடி மையத்துக்கு வந்தனர். மாற்றுத் திறனாளிகள், நடக்க இயலாத முதியோர் போன்றோரை அழைத்துச் செல்ல வீல் சேர்கள் பயன்படுத்தப்பட்டன.அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று, ஓட்டுப்பதிவு செய்ய தன்னார்வலர்கள் உதவிசெய்தனர்.வசதிகள்வாக்காளர்கள் வெயிலில் பாதிப்படையாமல் இருக்க, ஓட்டுச்சாவடிகளில், 'சாமியானா' அமைக்கப்பட்டது. குடிநீர் வசதியும் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. ஓட்டுச்சாவடி மையங்களில், வீண் அசம்பாவிதங்களை தடுக்க மத்திய ரிசர்வ் படை போலீஸ், அதிவிரைவுப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.பதற்றமான ஓட்டுச்சாவடி மையங்களில், வெப் கேமரா மூலம் ஓட்டுப்பதிவு கண்காணிப்பு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பதற்றமான ஓட்டுச்சாவடி மையங்களிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு, பலத்த பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE