ஓட்டு மாற்றுத்திறனாளிகள், மக்கள் அவதி

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : சட்டசபை தேர்தலை முன்னிட்டு ராமநாதபுரத்தில் ஓட்டுச்சாவடி மையங்களில் போதிய குடிநீர் வசதி, சக்கரநாற்காலி இன்றி மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் சிரமப்பட்டனர். பல இடங்களில் குப்பை மேலாண்மை கடைப்பிடிக்கவில்லை.சட்டசபை தேர்தலை முன்னிட்டு ராமநாதபுரம், உத்திரகோசமங்கை, கருங்குளம், திருப்புல்லாணி, கீழக்கரை, தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓட்டுசாவடி

ராமநாதபுரம் : சட்டசபை தேர்தலை முன்னிட்டு ராமநாதபுரத்தில் ஓட்டுச்சாவடி மையங்களில் போதிய குடிநீர் வசதி, சக்கரநாற்காலி இன்றி மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் சிரமப்பட்டனர். பல இடங்களில் குப்பை மேலாண்மை கடைப்பிடிக்கவில்லை.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு ராமநாதபுரம், உத்திரகோசமங்கை, கருங்குளம், திருப்புல்லாணி, கீழக்கரை, தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓட்டுசாவடி மையங்களில் ஓட்டளிக்க காலை 7:00மணிக்கே மக்கள் வந்திருந்தனர்.உத்திரகோசமங்கை ஓட்டுசாவடியில் கொரோனா பரவல் தடுக்க சமூக இடைவெளி கோடுகள் வரையாத காரணத்தினால் போதிய இடைவெளி இன்றி மக்கள் கூட்டமாக ஓட்டளித்தனர்.

இதேப்போல திருப்புல்லாணி அரசு உயர்நிலைப்பள்ளியில் வாக்காளர்களுக்கு ஓட்டளிக்க வழங்கிய கையுறைகள் முறையாக சேகரிக்கப்படாமல் வளாகத்தில் சிதறிக்கிடந்தது. தங்கச்சி மடத்தில் சக்கர நாற்காலி இல்லாதால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மிகவும் சிரமப்பட்டனர். போதிய குடிநீர், கழிப்பறை வசதியின்றி குழந்தைகளுடன் வந்த பெண்கள் பாதிக்கப்பட்டனர். பெயரளவில் ஓட்டுசாவடியில் அடிப்படைவசதி வாக்காளர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.--------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X