உடுமலை:உடுமலை அருகே, 106 வயது மூதாட்டி, ஓட்டுச்சாவடியில், ஓட்டுப்பதிவு செய்து, ஜனநாயக கடமையாற்றினார்.திருப்பூர் மாவட்டம், உடுமலை அடிவள்ளி கிராமத்தைச்சேர்ந்தவர், தமயந்தியம்மாள். கடந்த, 1915ல், பிறந்த இவர், நேற்று, அடிவள்ளி கிராமத்திலுள்ள, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 181எண்ணுடைய ஓட்டுச்சாவடியில், தனது ஓட்டை பதிவு செய்தார்.மகன் ஜெகதீஷ், உதவியுடன், மாலை 6:30 மணிக்கு, ஓட்டுச்சாவடிக்கு வந்த தமயந்தியம்மாளை, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வரவேற்று, 'வீல்சேர்' வாயிலாக, அழைத்துச்சென்றனர்.'தேர்தலில், ஓட்டுப்பதிவு செய்வதே முக்கிய கடமையாகும்; எனவே, அனைவரும், தவறாமல், ஓட்டளிக்க வேண்டும்,' என, அனைவருக்கும் தமயந்தியம்மாள், அறிவுரை வழங்குவார் என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.இம்முறை, வீட்டிலேயே ஓட்டுப்பதிவு செய்வதற்கான வாய்ப்பு இருந்தும், ஓட்டுச்சாவடியிலேயே தனது ஓட்டை பதிவு செய்ய ஆர்வம் காட்டினார். மூதாட்டியின், ஆர்வத்தை, கிராம மக்களும், ஓட்டுச்சாவடி அலுவலர்களும், வெகுவாக பாராட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE