சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆக்சிஜன் துண்டிப்பால் மூவர் பலி? அரசு மருத்துவமனையில் அவலம்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
சென்னை:சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட பிரச்னையால், அடுத்தடுத்து மூன்று பேர் இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், 300க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில், 81 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு, 'வென்டிலேட்டர்'

சென்னை:சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட பிரச்னையால், அடுத்தடுத்து மூன்று பேர் இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், 300க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில், 81 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு, 'வென்டிலேட்டர்' உதவியுடன், சுவாசத்திற்கு தேவையான ஆக்சிஜன் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளின் வென்டிலேட்டருக்கு, குழாய் வழியாக, ஆக்சிஜன் செல்வதில் தடை ஏற்பட்டது.இதன் காரணமாக, பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக, டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆயினும், சிகிச்சை பலனின்றி, 77 வயது மூதாட்டி, 41 வயது பெண், 17 வயது சிறுவன் என, மூன்று பேர் அடுத்தடுத்து உயிர் இழந்தனர்.

மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் கூறியதாவது: ஆக்சிஜன் வினியோகத்தில் தடை ஏற்படவில்லை; அழுத்த மாறுபாடு மட்டும் தான் இருந்தது. ஆக்சிஜன் முற்றிலும் தடைபட்டு இருந்ததால், அங்கு சிகிச்சை பெற்று வந்த அனைத்து நோயாளிகளும் உயிரிழந்து இருப்பர். ஆக்சிஜன் வினியோகம் தடுக்கப்பட்டதாக வரும் தகவல் தவறானது. அதிதீவிர உடல்நல பாதிப்பால் இருந்த இருவர் மட்டுமே இறந்துள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு கூறியதாவது:ராஜிவ்காந்தி அரசு மருத்துவ மனை யில், 60 கி.லி., ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. எந்த மருத்துவமனையிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை.உயிரிழந்த இரண்டு பேரில், ஒருவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, கடைசி நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு வந்தவர். மற்றொரு நபரும், உடல்நல பாதிப்புடன் தீவிர சிகிச்சையில் இருந்தார். இருவரும், உடல்நல பிரச்னையால் தான் இறந்துள்ளனர்; ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.ஆனால், 17 வயது சிறுவன் இறப்பு குறித்து, அதிகாரிகள் தரப்பில் எந்த பதிலும் இல்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X