தமிழ்நாடு

69.24 சதவீதம்! அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு சட்டசபை தொகுதிகளிலும் அமைதியான முறையில் சராசரியாக 69.24 சதவீத வாக்காளர்கள் ஓட்டளித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நான்குசட்டசபை தொகுதிகளில் அ.தி.மு.க., பா.ஜ., தி.மு.க., ம.நீ.ம., நாம்தழிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் என மொத்தம் 172 பேர் போட்டியிடுகின்றனர். நேற்று (ஏப்.,6) தேர்தலை முன்னிட்டு காலையில்
69.24 சதவீதம்! அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு சட்டசபை தொகுதிகளிலும் அமைதியான முறையில் சராசரியாக 69.24 சதவீத வாக்காளர்கள் ஓட்டளித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நான்குசட்டசபை தொகுதிகளில் அ.தி.மு.க., பா.ஜ., தி.மு.க., ம.நீ.ம., நாம்தழிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் என மொத்தம் 172 பேர் போட்டியிடுகின்றனர். நேற்று (ஏப்.,6) தேர்தலை முன்னிட்டு காலையில் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டு காலை 7:00மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது.

மக்கள் ஆர்வத்துடன் வந்தனர், முகக்கவசம் இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டது. சானிடைசர் மூலம் கைகளை கழுவியும், தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்ப பரிசோதனை செய்தபின் வாக்குச்சாவடிகளுக்குள் மக்கள் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவரது மனைவி ேஹாசியாவுடன் சுவார்ட் மேல்நிலை பள்ளியில் ஓட்டளித்தார்.

மாவட்டத்தில் ராமநாதபுரம், கீழக்கரை, பரமக்குடி ஆகிய இடங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 நபர்கள் ஓட்டளித்துள்ளனர். இரவு 7:00மணிக்குமேல் வேட்பாளர்களின் முகவர் முன்னிலையில் மின்னனு ஓட்டுபதிவு இயந்திரங்கள் ‛சீல்' வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரி ஓட்டு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. வரும் மே 2 ல் ஓட்டுஎண்ணிக்கை நடைபெற உள்ளது.

பரமக்குடி (தனி)- 2,55,654, திருவாடானை -2,90,943, ராமநாதபுரம்- 3,08,295, முதுகுளத்துார் - 3,10,268 என மொத்தம் 1369 பாகங்களில் ஆண்-5,79,908, பெண்-5,85,189, இதர்-63 என மொத்தம் 11,65,160 வாக்காளர்கள் உள்ளனர்.

ஓட்டுப்பதிவு விபரம்:

பரமக்குடி தனி - 1,80,269 (70.51%), திருவாடானை - 2,00,025 (68.75 % )ராமநாதபுரம் - 2,08,126 (67.51 %), முதுகுளத்துார்- 2,18,281 (70.35 %) என மொத்தம் 8,06,701 வாக்காளர் ஓட்டளித்துள்ளனர். சராசரியாக 69.24 சதவீதம் பதிவாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X