புவனகிரி:''தி.மு.க., கூட்டணி, 200 இடங்களில் வெற்றி பெறும்,'' என, தமிழக காங்., தலைவர் அழகிரி தெரிவித்தார்.
கடலுார் மாவட்டம், புவனகிரி சட்டசபை தொகுதி, கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஓட்டுச்சாவடியில், கே.எஸ்.அழகிரி நேற்று காலை ஓட்டு போட்டார்.பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:இந்த தேர்தல் நமது கலாசாரம், அடையாளத்தை காப்பதற்காக நடைபெறும் தேர்தல்.
கடந்த, 10 ஆண்டு கால, அ.தி.மு.க., ஆட்சியில், தமிழக வளர்ச்சிக்கும், பொதுமக்கள் நலனுக்கும், எந்த வளர்ச்சித் திட்டங்களையும் கொண்டு வரவில்லை.தமிழகத்தில், கட்டாயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முதல்வராவார். எங்கள் கூட்டணி, 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE