திருப்பூர்:பனியன் நகரான திருப்பூரில் வெளி மாவட்ட தொழிலாளர் ஏராளமானோர் பணிபுரிகின்றனர். தேர்தல் நாளான நேற்று, ஓட்டளிக்க வசதியாக, தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டது.ஓட்டளிக்க, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டத்தினர் கோவில் வழி பஸ் ஸ்டாண்டிலும், திருச்சி, கரூர் மாவட்டத்தினர் திருப்பூர் புது பஸ் ஸ்டாண்டிலும், பஸ்சுக்காக காத்திருந்தனர்.நீண்டநேரமாகியும், பஸ் வராததால் கோபமடைந்த பயணிகள், கோவில்வழி மற்றும் புது பஸ் ஸ்டாண்டில் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை, போலீசார் சமாதானப்படுத்தி, சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்தனர்.பல்லடத்திலும்...பல்லடம் பகுதியில் வசிக்கும் வெளி மாவட்ட தொழிலாளர் பலர், நேற்று முன்தினம் பணி முடிந்ததும், ஓட்டளிப்பதற்காக, சொந்த ஊர் புறப்பட்டனர். பஸ் ஸ்டாண்டில் நீண்ட நேரம் காத்திருந்தும், கோவையில் இருந்து வந்த பஸ்கள் அனைத்திலும், பயணிகள் நிரம்பி வழிந்ததால், பஸ் ஏற முடியவில்லை.ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் உட்பட பயணிகள், நேற்று காலை, சாலை மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., ஸ்ரீராமச்சந்திரன் பொதுமக்களிடம் பேசி, சமாதானம் செய்தார். இதனால், மறியல் கைவிடப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE