திருப்பூர்:ஓட்டுப்பதிவு துவங்கி உடனே, வேட்பாளர்கள் தங்கள் பகுதியிலுள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தனர்.திருப்பூர் தெற்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் குணசேகரன், வாலிபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஓட்டுச்சாவடி மையத்தில், காலை, 8:45 மணிக்கு ஓட்டுப்பதிவு செய்தார்; இவர், ஓட்டளிக்க வரிசையில் நின்ற வேட்பாளர்களை, கையெடுத்து கும்பிட்டார்.l ம.நீ.ம.,வின் தெற்கு தொகுதி வேட்பாளர் அனுஷாரவி, கே.பி.என்., காலனி சமுதாய நலக் கூடம் மையத்தில், காலை, 7:15 மணிக்கு ஓட்டளித்தார். பா.ஜ., முன்னாள் எம்.பி., சி.பி., ராதாகிருஷ்ணன், அரண்மனைப்புதுார் நகராட்சி நடுநிலைப்பள்ளியில், காலை, 8:15 மணிக்கு ஓட்டுப்பதிவு செய்தார்.l தெற்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் செல்வராஜின் வீடு, வடக்கு தொகுதிக்கு உட்பட்ட அப்பாச்சி நகரில் உள்ளது. இவர், வெட்கடாஜலபதிபுரம் மாநகராட்சி தொடக்க பள்ளி மையத்தில், வடக்கு தொகுதிக்கு ஓட்டுபோட்டார். முன்னதாக அவர், அருகிலுள்ள கோவிலுக்கு சென்று வந்ததால், பக்தி மயமாக காணப்பட்டார்.l தெற்கு தொகுதி அ.ம.மு.க., வேட்பாளர் விசாலாட்சி, பட்டுக்கோட்டையார் நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார். கலெக்டர் விஜயகார்த்திகேயன், வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பிஷப் உபகாரசாமி பள்ளி ஓட்டுச்சாவடியில், வரிசையில் காத்திருந்து, ஓட்டுப்பதிவு செய்தார்.l வடக்கு தொகுதி வேட்பாளர் இந்திய கம்யூ., ரவி, தெற்கு தொகுதிக்கு உட்பட்ட முருகப்ப செட்டியார் பள்ளியில் ஓட்டளித்தார். பல்லடம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ஆனந்தன், ஓடக்காடு ஈடன் கார்டன் பள்ளியில், ஓட்டுப்பதிவு செய்தார்.l திருப்பூர் வடக்கு தொகுதி ம.நீ.ம., வேட்பாளர் சிவபாலன், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள நெசவாளர் காலனி - மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியில், தனது மனைவியுடன் வந்து ஓட்டளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE