பொது செய்தி

தமிழ்நாடு

32 இடங்களில் இயந்திரம் பழுது

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியை ஆய்வு செய்த கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறுகையில், ''கொரோனா காலம் என்பதால், காய்ச்சல் பரிசோதனை செய்கிறோம். கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்த பின்பே அனுமதிக்கிறோம். கையுறைகள் முறையாக அகற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். 5 ஆயிரத்து, 400 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். பழுது காரணமாக, 32 இடங்களில் இயந்திரங்கள்

காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியை ஆய்வு செய்த கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறுகையில், ''கொரோனா காலம் என்பதால், காய்ச்சல் பரிசோதனை செய்கிறோம். கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்த பின்பே அனுமதிக்கிறோம். கையுறைகள் முறையாக அகற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். 5 ஆயிரத்து, 400 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். பழுது காரணமாக, 32 இடங்களில் இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன,'' என்றார்.தி.மு.க., வேட்பாளர் நம்பிக்கைமுத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஓட்டுச்சாவடிக்கு நேற்று காலை 7:00 மணிக்கு குடும்பத்துடன் வந்து, காங்கயம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் சாமிநாதன், ஓட்டளித்தார். சாமிநாதன் கூறுகையில், ''மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் பத்து ஆண்டுகள் ஆட்சி செய்த, அ.தி.மு.க., வினரை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவெடுத்து விட்டனர்,'' என்றார்.வேட்பாளர்கள் ஓட்டுப்பதிவுதாராபுரம் தொகுதியில், நகர்ப்புறத்திலுள்ள சி.எஸ்.ஐ., ஓட்டுச்சாவடியில் தி.மு.க., வேட்பாளர் கயல்விழி, கணவர் செல்வராஜூடம் வந்து தனது ஓட்டை பதிவு செய்தார். அ.ம.மு.க., வேட்பாளர் கலாராணி, பஜனை மடத்தெருவில் அமைந்த ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார். கவுண்டச்சிபுதுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காங்கயம் முன்னாள் எம்.எல்.ஏ., தனியரசு ஓட்டளித்தார்.உணவு ஏற்பாட்டில் குளறுபடிதிருப்பூர் வடக்கு தொகுதி, வாவிபாளையம் துவக்கப்பள்ளியில், கல்லுாரி மாணவர்கள், வாக்காளர்களுக்கு வெப்ப பரிசோதனை, கையுறை வழங்குதல் மற்றும் சானிடைசர் தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களுக்கு, காலை, 10:00 மணியாகியும் காலை உணவு வழங்கவில்லை. இதனால், அவர்கள் வெளியேறி விட்டனர். அதன்பின், பொதுமக்கள் தாங்களாகவே, கிருமிநாசினி தெளித்து, கையுறைகளை எடுத்து அணிந்து கொண்டனர்.'முரசு' சின்னம் பட்டன் பழுதுநெருப்பெரிச்சல், வாவிபாளையம் துவக்கப்பள்ளி, பூத் எண்:118ல் மாதிரி ஓட்டுப்பதிவின் போது, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் தே.மு.தி.க.,வின், 'முரசு' சின்னத்திற்கான, 'பட்டன்' பழுதாகியிருந்தது. சரிசெய்யப்பட்ட பின், ஒரு மணி நேரம் காலதாமதமாகவே ஓட்டுப்பதிவு துவங்கியது. இதே பள்ளியில், பூத் எண்:120ல் இயந்திரம் பழுது காரணமாக ஒரு மணி நேரம் ஓட்டுப்பதிவு தாமதமானது.ஓட்டு இல்லை; பெண் அதிர்ச்சிகாங்கயம் தொகுதி, வெள்ளகோவில் அருகேயுள்ள, நடுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஓட்டுச்சாவடிக்கு. கமலா, 58 என்பவர் நேற்று காலை 9:00 மணிக்கு ஓட்டளிக்க வந்தார். 'பூத் சிலிப்' மற்றும் வாக்காளர் அட்டையுடன் வந்த அவரது ஓட்டை, யாரோ, முன்னரே பதிவு செய்து விட்டதாக, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் கூறினர். இதனால் அவர், அதிர்ச்சியடைந்து, ஓட்டளிக்க முடியாமல் திரும்பினார்.ஓட்டுப்பதிவு; வேட்பாளர் ஆர்வம்காங்கயம் தொகுதி அ.தி.முக., வேட்பாளர் ராமலிங்கம், ஓட்டுச்சாவடிக்குள் நுழைந்து ஓட்டுப்பதிவு சதவீதத்தை அடிக்கடி, 'செக்' செய்தபடி இருந்தார். மதியம், 2:00 மணியளவில் பழையகோட்டை ரோடு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ராஜாஜி வீதி ஓட்டுச்சாவடிகளில் உள்ளே சென்று, 'எத்தனை ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன?' என கேட்டார். அங்கிருந்தவர்கள், '40 சதவீதம்' என்றதும், கட்சியினரை குறித்து வைக்க சொன்னார்.கண்டும் காணாத போலீசார்!தாராபுரம், வளையல்கார தெருவில், அமைக்கப்பட்டிருந்த மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், முறையாக கண்காணிப்பு பணியில் ஈடுபடவில்லை. ஓட்டளிக்க வாக்காளர்கள், அங்காங்கே நின்று கும்பலாக பேசிக்கொண்டிருந்தனர். ஏஜன்ட்களே வாக்காளர்களை அழைத்து சென்றனர். 100 மீ., தொலைவில் கட்சியினருக்கு அனுமதியில்லை. ஆனாலும், தி.மு.க., வினர் கும்பலாக அமர்ந்தபடி இருந்தனர்.வாக்காளருக்கு உதவிய போலீசார்திருப்பூர் வடக்கு தொகுதி, பிஷப் பள்ளி ஓட்டுச்சாவடி மையத்தில், போலீசார் உதவி செய்தனர். விவரங்களை கேட்டு, தங்கள் மொபைலில், வாக்காளர் அட்டையை டவுன்லோட் செய்தனர். ஓட்டுச்சாவடி எண், வரிசை எண் விவரங்களை வாக்காளர்களுக்கு தெரிவித்தனர்.'டெண்டர்' ஓட்டு பரபரப்புதிருப்பூர், புதுராமகிருஷ்ணாபுரம் பள்ளி மையத்தில், 276-ஏ ஓட்டுச்சாவடியில், சாந்தி என்பவர் ஓட்டு போட வந்தார். வேறு ஒருவர், ஏற்கனவே இவரது பெயரிலான ஓட்டளித்தது தெரியவந்தது. அதனால், அவருக்கு 'டெண்டர்' ஓட்டு வழங்கப்பட்டது. இதேபோல், கோல்டன் நகரில், ஓட்டுச்சாவடி எண்: 289ல், செல்வராஜ் என்பவரின் ஓட்டு யாரோ பதிவிட்டதால், இவருக்கும் 'டெண்டர்' ஓட்டு வழங்கப்பட்டது.களமிறங்கிய மாணவர்கள்திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லுாரி, செயின்ட் ஜோசப் கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவ, மாணவியர், தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர். திருப்பூர் வடக்கு, தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பல பள்ளிகளில் அமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடி மையங்களில், வாக்காளரின் உடல் வெப்பநிலை பரிசோதித்தல், கையுறை, சானிடைசர் வழங்கல் ஆகிய பணிகளை மாணவர்கள் மேற்கொண்டனர்.அமைதியான ஓட்டுப்பதிவுபல்லடம் தொகுதியில், நேற்று காலை, 6.30 மணிக்கு முன்பாக ஓட்டுச்சாவடிகளில் மாதிரி ஓட்டுப்பதிவு நடந்தது. அதன்பின், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் ஓட்டுப்பதிவு சரியான நேரத்தில் துவங்கியது. முதியவர்களும், மாற்றுத்திறனாளிகள், ஆர்வத்துடன் ஜனநாயக கடமையை ஆற்றினர். பல்லடம் தொகுதியை பொறுத்தவரை ஓட்டுப்பதிவு அமைதியான முறையில் நடந்தது. குடிநீர் வசதி முறையாக செய்யப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X