சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பூட்டிய வீட்டுக்குள் மதுபாட்டில் பறக்கும் படையினர் பறிமுதல்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
திருப்பூர்:தேர்தல் நாளான நேற்று, திருப்பூர் வடக்கு தொகுதியில், வீட்டில் பெட்டி பெட்டியாக பதுக்கிவைத்திருந்த மதுபாட்டில் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில், 4ம் தேதி முதல் நேற்று வரை, மூன்று நாட்கள் 'டாஸ்மாக்' மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இருப்பினும், ஆங்காங்கே, சிலர்
 பூட்டிய வீட்டுக்குள் மதுபாட்டில் பறக்கும் படையினர் பறிமுதல்

திருப்பூர்:தேர்தல் நாளான நேற்று, திருப்பூர் வடக்கு தொகுதியில், வீட்டில் பெட்டி பெட்டியாக பதுக்கிவைத்திருந்த மதுபாட்டில் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில், 4ம் தேதி முதல் நேற்று வரை, மூன்று நாட்கள் 'டாஸ்மாக்' மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இருப்பினும், ஆங்காங்கே, சிலர் மதுபாட்டில் பதுக்கி அதிக விலைக்கு விற்று கொண்டிருந்தனர்.அவ்வகையில், திருப்பூர் கொங்குமெயின் ரோடு, இ.எஸ்.ஐ., மருத்துவமனை எதிரே, மதுக்கடை (எண்:1909) உள்ளது. இதில், கார்த்தி என்பவர், 'பார்' நடத்தி வருகிறார். 'பாரில்' பணிபுரிவோர், அருகில் உள்ள ஒரு வீட்டில் தங்கியுள்ளனர்.இந்த வீட்டினுள் பதுக்கி வைத்து, மது விற்பனை செய்வதாக, பறக்கும்படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், வடக்கு தொகுதி பறக்கும்படை அலுவலர் மாரியப்பன், நேற்று காலை சோதனை நடத்தினார்.அதிகாரிகளை பார்த்த இருவர், தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். மேலும் இருவர், கதவை பூட்டிக்கொண்டு, திறக்கமறுத்து உள்ளே இருந்தனர். போலீசாரும், அதிகாரிகளும் எச்சரிக்கை விடுத்ததால், கதவை திறந்தனர்.உள்ள இருந்த பார்த்திபன், 22, ராஜேஷ், 23 ஆகிய இருவரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி, பெட்டிகளில் விற் பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 396 மது பாட்டில், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள்மற்றும் 14 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X