உடல் வெப்ப பரிசோதனை: அனல் பறந்த விவாதம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உடல் வெப்ப பரிசோதனை: 'அனல்' பறந்த விவாதம்

Added : ஏப் 06, 2021
Share
அவிநாசி:அவிநாசி, முத்துசெட்டிபாளையம், புனித தோமையர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 11 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.அதில், 112 எண் கொண்ட ஓட்டுச்சாவடியில், வாக்காளர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து, ஓட்டளித்தனர்.அதில், ஓரிரு வாக்காளர்களின் உடல் வெப்பநிலை சற்று அதிகமாக இருந்தது. 'உடல் வெப்பம் சற்று அதிகமாக இருப்பதால் காய்ச்சல் இருக்க வாய்ப்புள்ளது. எனவே,

அவிநாசி:அவிநாசி, முத்துசெட்டிபாளையம், புனித தோமையர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 11 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.அதில், 112 எண் கொண்ட ஓட்டுச்சாவடியில், வாக்காளர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து, ஓட்டளித்தனர்.அதில், ஓரிரு வாக்காளர்களின் உடல் வெப்பநிலை சற்று அதிகமாக இருந்தது. 'உடல் வெப்பம் சற்று அதிகமாக இருப்பதால் காய்ச்சல் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, மாலை, 6:00 மணிக்கு மேல் வந்து, ஓட்டளித்து கொள்ளுங்கள்' என ஊழியர் ஒருவர் அந்த வாக்காளரிடம் கூறினார்.சிலர், டென்ஷனாகி, '40 நிமிடத்துக்கு மேலாக வெயிலில் காய்ந்த படி, நின்றால் உடல் வெப்பநிலை சற்று அதிகமாகத்தான் இருக்கும்,' என, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால், சில நிமிடங்கள் கழித்து, குறிப்பிட்ட வாக்காளருக்கு, மீண்டும் பரிசோதனை செய்த போது, இயல்பு நிலையில் இருந்ததால், அவர் ஓட்டளிக்க அனுமதிக்கப்பட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X