பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டளித்த 103 வயது முதியவர்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதிமுதுனாலைச்சேர்ந்த 103 வயது முதியவர் ஓட்டளித்தார்.முதுனால் பகுதியைச் சேர்ந்த 103 வயதான அ. கருப்பணன்அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஓட்டுசாவடிமையத்தில் குடும்பத்தினருடன் வந்து ஓட்டளித்தார்.அவர் கூறுகையில், '1918ல் பிறந்தேன், ராமநாதபுரம் சமஸ்தானத்தில் கூலி வேலை புரிந்தேன். தவறாமல் ஒவ்வொரு தேர்தலிலும்
 ஓட்டளித்த 103 வயது முதியவர்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதிமுதுனாலைச்சேர்ந்த 103 வயது முதியவர் ஓட்டளித்தார்.

முதுனால் பகுதியைச் சேர்ந்த 103 வயதான அ. கருப்பணன்அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஓட்டுசாவடிமையத்தில் குடும்பத்தினருடன் வந்து ஓட்டளித்தார்.அவர் கூறுகையில், '1918ல் பிறந்தேன், ராமநாதபுரம் சமஸ்தானத்தில் கூலி வேலை புரிந்தேன். தவறாமல் ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டளிக்கிறேன். 80வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தபால் ஓட்டளிக்க அரசு அதிகாரிகள் கேட்டனர்.

நடக்க தெம்பு உள்ளது .நேரடியாக ஓட்டளிப்பேன் என தபால்ஓட்டை மறுத்து விட்டேன், ஓட்டுச்சீட்டில் முத்திரை பதித்த காலம்போய், தற்போது பட்டனை அழுத்தி விரும்பிய நபருக்கு ஓட்டளிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்த தேர்தலின் போது இருப்பேனா எனத் தெரியாது. 18 வயதான அனைவரும் மறக்காமல் தேர்தலில் ஓட்டளிக்க வேண்டும்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X